பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தோல்வி குறித்து சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.
வரலாற்று வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் அதே வேளையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து சொந்த நாடு திரும்பிய நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜா முன்னணி அணிகளுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பாகிஸ்தான் அணி பலம் இல்லாத அணிகளுக்கு நிகராக அவர்களது மட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடுவதாக குற்றம் சாட்டி சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுதான் ஏமாற்றம் அளிக்கக் கூடிய பகுதி
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இதுதான் நமது கிரிக்கெட்டின் ஒரு ஏமாற்றம் அளிக்கும் பகுதியாக இருக்கிறது. முன்னணி அணிகளுக்கு எதிராக நாம் நமது ஆட்டத்திறனை உயர்த்துகிறோம். ஆனால் பலவீனமான அணிகளுக்கு எதிராக நாம் நமது தரத்தை கைவிட்டு அவர்களது மட்டத்தில் விளையாடுகிறோம். பாகிஸ்தான் போன்ற ஒரு அணியிடம் இருந்து நீங்கள் எதிர்பாராத அடிப்படை தவறுகள் முழுமையாக வெளிப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:ஐசிசி 2024 விருதுகள்.. முதல் இந்திய பவுலராக.. பும்ரா படைத்த அற்புதமான சாதனை.. முழு விபரம்
இதை விளக்கிக் கூறுவது கடினமான விஷயமாகும். குறிப்பாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பாரம்பரியமான சுழற் பந்துவீச்சு சூழலுக்கு எதிராக வலிமையாக இல்லை. இருந்தாலும் ஆடுகளத்தின் சூழ்நிலை, டாசை வெல்வது மிக முக்கியமானதாக மாறியது. டாசை இழந்து நீங்கள் நிலைமைகளை பயன்படுத்திக் கொள்ளத் தவற விட்டீர்கள் என்றால் இது போன்ற தோல்விகள் மறுக்க முடியாதது ஆகிவிடும்” என்று கூறி இருக்கிறார். இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி என்று 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.






