இலங்கை டெஸ்ட்.. ஆஸி அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. 2 ஸ்டார் வீரர்களுக்கு ஓய்வு.. சுழல் கூட்டணி

0
924
Australia

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி இந்த மாதத்தில் விளையாட இருக்கிறது. தற்போது இதற்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. எனவே நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் தொடர் எந்த விதத்திலும் தாக்கத்தை செலுத்தப் போவதில்லை. ஆனால் உள்நாட்டில் இலங்கை ஆஸ்திரேலியாவை வென்றால் அவர்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தோல்வியுடன் செல்லும்!

- Advertisement -

அறிவிக்கப்பட்ட புதிய கேப்டன்

ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 29ஆம் தேதி காலே மைதானத்தில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கிய நடைபெறுகிறது. இதற்கடுத்து ஆஸ்திரேலியாவின் இந்த சுற்றுப்பயணத்தில் ஒரே ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் இலங்கை வரவில்லை. அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு கேட்டு வாங்கி இருக்கிறார். மிட்சல் மார்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். காயம் சரியாகாததால் ஹேசில்வுட் இடம் பெறவில்லை. ஸ்டீவ் ஸ்மித் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் சுழல் கூட்டணி

இலங்கையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்படுகின்ற காரணத்தினால் ஆஸ்திரேலிய அணியில் சுழல் பந்துவீச்சாளர்கள் நாதன் லயன், டாட் மர்பி, மேட் குஹ்னேமேன் என மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இத்தோடு வேடப்பந்துவீச்சாளர்களாக மிச்சம் ஸ்டார் இந்திய தொடரில் கலக்கிய ஸ்காட் போலன்ட், சீன் அப்பாட் இடம்பெற்று இருக்கிறார்கள். மேலும் இளம் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கூப்பர் கானோலி முதல் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கிட்ட பேசற அளவுக்கு கம்பீர் கிடையாது.. இந்த பல தவற செஞ்சிட்டாரு – முகமது கைஃப் விமர்சனம்

ஆஸ்திரேலியா அணி: ஸ்டீவ் ஸ்மித் (கே), சீன் அபோட், ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட் (து.கே), ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க் மற்றும் பியூ வெப்ஸ்டர்.

- Advertisement -