சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆப்கான் மாஸ்டர் பிளான்.. முக்கிய முன்னாள் வீரரை தூக்கியது – வெளியான தகவல்கள்

0
36
Younis

ஆப்கானிஸ்தான அணி பாகிஸ்தானில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அவர்களது வழக்கமான ஐசிசி தொடர்களுக்கான திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி அசத்தியிருக்கிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரண்டு நாடுகளில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி தனது எல்லா போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. மற்ற அணிகள் தங்கள் போட்டிகளை பாகிஸ்தானில் வைத்து விளையாடுகின்றன.

- Advertisement -

ஐசிசி தொடர்களுக்கு ஆப்கான் வழக்கமான திட்டம்

பொதுவாக ஆப்கானிஸ்தான் அணி ஐசிசி தொடர்கள் வரும்பொழுது அந்தத் தொடர் எந்த நாட்டில் நடக்கிறதோ அந்த நாட்டு முன்னாள் வீரர் ஒருவரை மென்டராக தேர்ந்தெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அளவில் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவி செய்தும் இருக்கிறது என்று கூறலாம்.

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது, இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவை மென்டராக கொண்டு வந்தார்கள். அந்தத் தொடரில் மூன்று பெரிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு மிக நெருக்கத்தில் இருந்தார்கள். இதேபோல கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் பிராவோவை மென்டராக நியமித்தார்கள். மேலும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்கள்.

- Advertisement -

மீண்டும் அசத்தல் நியமனம்

இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் யூனிஸ் கானை மென்டராக கொண்டு வந்திருக்கிறார்கள். சிறந்த கிரிக்கெட் மூளை கொண்ட யூனிஸ் கான் நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்ல பங்களிப்பை கொடுப்பார் என கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : கடவுள் விளையாட்டு விளையாடாதீங்க.. கடைசியில் அந்த பையன் கிரிக்கெட் வாழ்க்கை பாவம் – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக பார்க்கப்படும் யூனிஸ் கான் 118 டெஸ்ட் போட்டியில் 10,099 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ஒரு முச்சதமும் அடக்கம். 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் டி20 அணியை வழிநடத்தி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை கேப்டனாக வென்றும் கொடுத்திருக்கிறார். இந்த வகையில் ஆப்கானிஸ்தான அணி இவரை மென்டராக கொண்டு வந்து மிகப்பெரிய நகர்வை மேற்கொண்டு இருக்கிறது!

- Advertisement -