கடவுள் விளையாட்டு விளையாடாதீங்க.. கடைசியில் அந்த பையன் கிரிக்கெட் வாழ்க்கை பாவம் – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
213
Sarfaraz

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் வாய்ப்பு பெற்ற விதம் தவறாக இருந்தது என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி தொடரை இழந்ததால் விமர்சனங்கள் இப்பொழுது வரை தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் சர்மா ஏற்படுத்திய முதல் குழப்பம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தினால் முதல் டெஸ்ட்டை தவறவிட்டார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. துவக்க இடத்தில் கேஎல்.ராகுல் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார். எனவே அடுத்து ரோகித் சர்மா வந்ததும் நேரடியாக துவக்க இடத்திற்கு செல்ல முடியவில்லை.

இதன் காரணமாக முதல் டெஸ்டில் ஆறாவது இடத்தில் வாய்ப்பு பெற்ற துருவ் ஜுரல் இடத்தில் களம் இறங்கினார். இளம் வீரர் ஜூரல் ஒரு போட்டியுடன் ஆஸ்திரேலிய தொடரில் ஓரம் கட்டப்பட்டார். மேலும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தரப்படாமல் சர்பராஸ் கான் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அவர் வாய்ப்பு பெற்றதில் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே மோசமானதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடவுள் விளையாட்டு வேண்டாம்

இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது “சர்ப்ராஸ் கான் தனது முதல் தர உள்நாட்டு கிரிக்கெட்டின் அற்புதமான சாதனைகளின் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். இந்திய அணிக்கு மூன்று அரை சதம் மற்றும் ஒரு 150 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் மோசமாக அவுட் ஆகி இருந்தார். பின்னர் முழுவதுமாக அவருக்கு வாய்ப்பு தராமல் வெளியேற்றப்பட்டார். இது சரியானது இல்லை என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: விராட் பற்றிய அந்த வதந்தி உண்மையா இருக்கணும்.. அது நல்லதாகவே முடியும் – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

“சர்பராஸ் கான் இந்த வகையான ஆடுகளங்களில் ரன்கள் எடுக்க மாட்டார் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவர் தேர்டு மேன் திசையில் ரன் எடுப்பதற்கு வழியை கண்டுபிடித்து இருந்தால் என்ன செய்வீர்கள்? அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக எப்படி விளையாடினார் என்பது நல்ல உதாரணம். நீங்கள் அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கவலைப்பட வேண்டும். மாறாக கடவுள் போல விளையாட கூடாது. அவருடைய சாதனைகளுக்கான வெகுமதிகளை கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -