வரலாற்றை நிச்சயம் மாற்றுவோம்.. பைனல்ல ஆஸி அணிக்கு இதை நாங்க செய்வது உறுதி – தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா

0
29

சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மோதல் குறித்த சில நம்பிக்கையான வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென்னாபிரிக்க அணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் திரில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதன் முறையாக தகுதி பெற்றது. கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் தென்னாப்பிரிக்க அணி இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மேலும் கடந்த முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியும் இந்த முறை இந்திய அணியை வீழ்த்தி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை ஐசிசி தொடர்களில் இன்னும் ஒரு கோப்பை கூட வெல்லாத நிலையில் அந்த வரலாறை நிச்சயமாக மாற்றியமைப்போம் என்று தென்னாபிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடுவதில் நாங்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே அதில் எந்த ஒரு மோசமான சாதனையும் நிச்சயமாக இருக்கப் போவதில்லை. இந்த தருணத்தை நாங்கள் ரசித்து விளையாட போகிறோம். மேலும் எங்கள் அணியில் விளையாடி வரும் இளம் வீரர் க்வானா மகாபா இளமையின் உற்சாகம் மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட பையனாக திகழ்கிறார்.

இதையும் படிங்க:கேஎல் ராகுல் எதிர்காலம் நல்லா இருக்கணும்னா.. ரோஹித் இந்த வேலையை செய்யவே கூடாது – மஞ்சுரேக்கர் பேட்டி

மேலும் அவர் தென் ஆப்பிரிக்க அணியில் இருக்க விரும்புகிற ஒரு வீரர். அவர் ஒருபோதும் தலை குனிந்து இருக்க விரும்பவில்லை. எப்போதுமே அணியில் இருக்க விரும்புகிற ஒரு வீரராக திகழ்கிறார்” என்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டி இரு நாட்டு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -