தற்போது நடைபெற்ற முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 10 வருடங்களுக்குப் பிறகு கம்மின்ஸ் தலைமையில் பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பை கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஆஸ்திரேலியா தொடரில் கேஎல் ராகுல் விளையாடிய விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
திடீரென சரிவை கண்ட கே.எல் ராகுல்
கேஎல் ராகுல் வெளிநாடுகளில் எப்போதுமே சிறப்பான பேட்டிங் சராசரியை கொண்டுள்ள காரணத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். முதல் சில போட்டிகளில் மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவாக வெளியேறினாலும் ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து மிகச் சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். எனவே இந்த தொடர் மூலமாக கேஎல் ராகுல் டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு அரை சதங்கள் அடித்ததற்கு பிறகு மீண்டும் அவரது பேட்டிங் சரிவை காண ஆரம்பித்தது.
குறிப்பாக தொடக்க இடத்தில் நன்றாக செட் ஆகியிருந்த கேஎல் ராகுலை அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளே வந்த பிறகு மூன்றாவது வரிசையில் ராகுலை மாற்ற அங்கிருந்து அவரது ஆட்டம் சில சரிவைக்கான ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் பேட்டிங் செய்த விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரோஹித் எதையும் மாற்றக்கூடாது
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கே.எல் ராகுல் பற்றி இப்போது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா தொடரின் தொடக்கத்தில் அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். டெஸ்ட் அணியில் மிக கச்சிதமாக தோற்றமளித்தார். பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 80 ரன்கள் வரை கிடைத்தது. இது அவரது வாழ்க்கையை சரியான திசையில் மாற்றக்கூடும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் திரும்பவும் சரிவை காண ஆரம்பித்தார்.
இதையும் படிங்க:1 வருடம் வெறும் 4 மேட்ச்.. ஐசிசி எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.?. அட்டவணையை மாத்துங்க – இலங்கை அணி மேத்யூஸ்
இனி வரப் போகிற இங்கிலாந்து தொடரை கருத்தில் கொண்டு இந்திய அணி மீண்டும் ஒரு தொடக்க வீரரை தேடாது என்று கருதுகிறேன். அவர்கள் உள்நாட்டுத் தொடரில் விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரனை தேட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கேஎல் ராகுல் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார். எனவே ரோஹித் சர்மா திரும்ப உள்ளே வந்து தொடக்க இடத்தை கலைக்காத வரை இந்த வரிசை அப்படியே தொடரும் என்று நான் உணர்கிறேன்” என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறி இருக்கிறார்.






