ரோகித்தைப் பற்றி அந்த விஷயம் சொல்ல முடியாது.. ஆனா அவர் இதுக்கு நிச்சயம் தேவை – கங்குலி கருத்து

0
170
Ganguly

தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மோசமாக விளையாடி வருவதால் அவருடைய ஓய்வு குறித்து பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சௌரவ் கங்குலி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகவும் மோசமான முறையில் அமைந்தது. இதன் காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்கின்ற கருத்துகள் மிக அதிகமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

பும்ராவை விட ஒரு ரன் அதிகம்

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தொடரில் பும்ரா மொத்தம் 30 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ஆனால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மொத்தம் 31 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அந்த அளவிற்கு அவருடைய பேட்டிங் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

மேலும் இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட இன்னும் ஆறு, ஏழு மாதங்கள் இருக்கிறது. எனவே தற்போது 37 வயதாகும் ரோகித் சர்மா 38வது வயதுக்குள் அப்போது நுழைந்து விடுவார். இதன் காரணமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட வேண்டும் என பலரும் கூறுகிறார்கள்.

- Advertisement -

குறிப்பிட்ட விஷயம் எனக்கு தெரியாது

இது குறித்து சௌரவ் கங்குலி கூறும் பொழுது “ரோகித் சர்மாவால் ரன் எடுக்க முடியவில்லை. அவர் முதல் இன்னிங்ஸில் ஒரு லூசான ஷாட் விளையாடி அவுட் ஆனார். இருந்த போதிலும் சிட்னியில் இன்னும் ஒரு டெஸ்ட் மீதம் இருக்கிறது. இதன் காரணத்தால் அவர் தற்போது இந்திய அணிக்கு தேவைப்படுகிறார். ஓய்வு குறித்து ரோகித் சர்மா மனதளவில் எந்த அளவில் இருக்கிறார் என்று தெரியவில்லை. தற்போது இதில் கருத்து தெரிவிப்பது கடினம்”

இதையும் படிங்க : ரோகித் சர்மா விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. ரவி சாஸ்திரி நேரடியான பேச்சு

“விராட் கோலி மோசமாக விளையாடி விடவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து ஒரே மாதிரி அவுட் ஆகி கொண்டு இருக்கிறார். இருந்தபோதிலும் பெர்த் மைதானத்தில் சதம் அடித்தார். மெல்போன் மைதானத்தில் முதல் இன்னிங்சில் அவர் நன்றாக விளையாடினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -