ரோகித் சர்மா விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. ரவி சாஸ்திரி நேரடியான பேச்சு

0
2447
Shastri

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி ஐந்தாவது நாளில் பேட்டரிகள் மீண்டும் மோசமாக செயல்பட்டுள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெறுவது குறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்வதற்காக கடைசி நாளில் போராடி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மேலும் ரிசப் பண்ட் ஆகியோர் பொறுப்பெற்ற முறையில் விக்கெட்டுகளை கொடுத்தது இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி 3 முதல் 4 ஆண்டுகள்

இந்த நிலையில் இருவரும் ஓய்வு பெற வேண்டுமா? என்பது குறித்து பேசி இருக்கும் ரவி சாஸ்திரி கூறும் பொழுது “இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. விராட் கோலி இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் விளையாடுவார். அவர் இன்று அவுட் ஆனதை மறந்து விடுவார். மேலும் இன்னும் அவர் சில ஆண்டுகள் விளையாடுவது எனக்கு உறுதியாக தெரிகிறது”

“ரோகித் சர்மாவை பொருத்தவரையில் இது அழைப்பை எடுக்க வேண்டியது அதற்கான ஒரு நேரமாக இருக்கிறது. அவரது ஃபுட் வொர்க் ஒரே மாதிரியாக இல்லை. அவர் பந்தை சந்திப்பதில் சிறிது தாமதமாக இருக்கிறார். எனவே இந்த தொடர் அவர் முடிவை எடுக்க வேண்டியதற்கான தொடராக அமைந்துவிட்டது”

- Advertisement -

ஆஸ்திரேலியா வேறு மாதிரி செய்கிறது

“அதே சமயத்தில் ஆஸ்திரேலியா பக்கம் கேப்டனை எடுத்துக் கொண்டால் அவர்கள் போராடுவதை மிக விரும்பி செய்கிறார்கள். அவர்களுடைய கேப்டன் அதை மிகவும் விரும்புகிறார். நேற்று கம்மின்ஸ் பேட்டிங் செய்யும் பொழுது கூட அவரது கண்களில் அவ்வளவு உறுதிப்பாடு தெரிந்தது. அவர் எதையும் விட்டுவிடப் போவதில்லை”

இதையும் படிங்க :87 ஆண்டுகால வரலாறை முறியடித்த பாக்ஸிங்டே டெஸ்ட்.. இந்தியா ஆஸி டெஸ்ட் தொடர்.. வரலாறு காணாத கூட்டம்

“அவர்கள் ரோகித் சர்மாவை நோக்கி சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்கள் அட்டாக் செய்யும் பந்துவீச்சு வியூகத்தை வைத்திருந்தார்கள் என்று கூறலாம். அவர்கள் போட்டியில் உங்களுக்கு எதையுமே கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரே ஸ்பெல்லில் இருந்தார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -