நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோனியின் சாதனை ஒன்றை ரிஷப் பண்ட் முறியடித்து இருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல்நாள் முடிவில் வெறும் எட்டு ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திடீர் நெருக்கடியில் சிக்கியது. இன்று காலை உள்ளே வந்த ரிஷப் பண்டு வெறும் முக்கால் மணி நேரத்தில் அழுத்தத்தை திருப்பி நியூசிலாந்து அணியின் மீது போட்டு இருக்கிறார்.
இந்திய அணியின் சரிவு
நேற்று துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு வில் யங் மற்றும் டேரில் மிட்சல் இருவரும் அரை சதங்கள் அடிக்க நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இது தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 78 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து நேற்று மிகவும் வலிமையான இடத்தில் இருந்தது. முதல் நாள் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில் இந்திய அணி திடீரென ஜெய்ஸ்வால் முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி என மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நேற்று இந்திய அணி 86 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ரிஷப் பண்ட் சாதனை
இன்று காலை களத்திற்குள் வந்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்தார்கள். குறிப்பாக ரிஷப் பண்ட் பேட்டிங்கில் அனல் பறந்தது. வெறும் 36 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அரைசதம் அடித்தார். மேலும் 59 பந்தில் 60 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ரிஷப் பண்ட் இந்த போட்டியில் 101.69 ஸ்ட்ரைக் ரேட்டில் அரை சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 100+ ஸ்ட்ரைக் ரேட்டில் அரை சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனியை தாண்டி புதிய சாதனையைப் படைத்தார். மேலும் எதிர்காலத்தில் இந்த பட்டியலில் முதல் இடத்தை ரிஷப் பண்ட் பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இதையும் படிங்க : ரோகித் இந்த மோசமான விஷயத்தை தொடர்ந்து செய்யறார்.. அவர் அவுட் ஆக காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக அரை சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் :
8- ஆடம் கில்கிறிஸ்ட்
5- ரிஷப் பந்த்*
4- எம்எஸ் தோனி
4- ஜானி பேர்ஸ்டோவ்
4 – சர்பராஸ் அகமது
3- குயின்டன் டி காக்
3-என்.டிக்வெல்ல
3- மேட் பிரார்






