ரோகித் இந்த மோசமான விஷயத்தை தொடர்ந்து செய்யறார்.. அவர் அவுட் ஆக காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
319
Rohit

பங்களாதேஷ் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் மிகவும் மோசமாக இருந்து வருவது குறித்து தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்துகள் சந்தித்து 18 ரன்கள் எடுத்து மோசமான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து அவர் ஒரே முறையில் ஆட்டம் இழந்து வருவது பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் பலவீனம்

ரோஹித் சர்மாவுக்கு வேகப்பந்து வீச்சில் பந்து உள்ளே வராமல் வெளியே நகரும் பொழுது, அவர் அந்தப் பந்தை கணிக்காமல் லெக் சைடு விளையாடுவதற்கு முயற்சி செய்து எல்லா முறைகளிலும் தொடர்ந்து ஆட்டம் இழந்து வருகிறார். இது பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் ஹஸன் மக்மூத் ஆரம்பித்தது.

இதற்கு அடுத்து நியூசிலாந்து தொடரில் அவர் டிம் சவுதி பந்துவீச்சில் அதே முறையில் தொடர்ந்து ஆட்டம் இழந்தார். நேற்று மேட் ஹென்றியின் அதே போலான ஒரு பந்தில் அதே முறையில் ஆட்டம் இழந்தார். அவர் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறார் என விமர்சகர்கள் தெளிவாக கூறிய பின்னரும் கூட, அவர் அதில் வேலை செய்து சரி செய்ததாக தெரியவில்லை.

- Advertisement -

அவரின் பிரச்சனை இதுதான்

இதுகுறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ரோஹித் சர்மாவுக்கு பேட்டிங் ஃபார்ம் இல்லை என்று நான் நினைக்கமாட்டேன். ஏனென்றால் அவர் கிரிஸில் இருக்கும் போது விளையாடும் ஷாட்களை வைத்தே இதை நான் கூறுகிறேன். ஃபார்ம் இல்லாத பேட்ஸ்மேன்கள் பேக் புட் பஞ்ச் போன்ற ஷாட்களை அவ்வளவு சுலபமாக விளையாடி விட முடியாது. லெந்தில் பந்து சிறிது தவறாக விழும் பொழுது அவர் சுலபமாக கவரில் விளையாடுகிறார்”

இதையும் படிங்க : நான் ஓய்வு பெறும் வரை இது நடக்காதுனு நம்பினேன்.. ஆனா அந்த சோகம் நடந்துடுச்சு – ஜடேஜா வருத்தம்

“ரோஹித் சர்மா உலகத்தரம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மேன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர் விளையாடுகின்ற டெம்போ தனித்துவமானது. அவருடைய பிரச்சனை என்பது ஷாட் செலக்சன். பந்து நான்காவது ஸ்டெம்பில் இருந்தது. ஆனால் அவர் லெக்சைடு விளையாடுவதற்காக பேட்டின் ஃபேஸை மூடினார். இதுதான் அவர் சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -