இந்திய டெஸ்ட் தொடரில்.. நாங்க இத ஞாபகம் வைக்கலனா.. எங்க கதை முடிந்தது – பேட் கம்மின்ஸ் கருத்து

0
541
Cummins

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் எது என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியிருக்கிறார்.

தற்போது உலக கிரிக்கெட்டில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இருக்கின்றன. மேலும் இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் மோதிக்கொள்ள இருப்பதால் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு மிகவும் எதிர்பார்ப்பு அதிகமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு இருக்கும் இரண்டு சிக்கல்கள்

தற்போது ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் இடத்திற்கு புதிய வீரர் யாரையும் கொண்டு வரவில்லை. மாறாக நான்காவது இடத்தில் இருந்த நட்சத்திர வீரர் ஸ்மித்தை மேலே அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் ஸ்மித்துக்கு அந்த இடம் சரி வரவில்லை. தற்போது யாரை மேலே அனுப்புவது? என்ற விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களாக பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்த வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் தற்பொழுது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு வெளியில் இருக்கிறார். மேற்கொண்டு அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டும் ஆசிரியர் அணிக்கு தற்போது பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.

- Advertisement -

நாங்கள் இதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்

இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது “இந்திய அணிக்கு எதிராக நான் விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் நான் அவர்களிடம் ஒரு அம்சத்தை பார்த்தேன். அது என்னவென்றால் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளின் கடைசி செஷன் வரை செல்கிறது. கடந்த முறை காபாவில் இதுதான் நடந்தது. எனவே நாங்கள் எங்களிடம் இருக்கும் வீரர்களை சரியான முறையில் பார்த்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை நாங்கள் ஞாபகத்திலும் வைத்துக்கொள்ள வேண்டும்”

“எங்கள் அணிக்கு பேட்டிங் ஆர்டரை நான் மற்றும் ரான் இருவரும் சேர்ந்துதான் அமைத்து வருகிறோம்.தற்போது எங்களுடைய பேட்டிங் ஆர்டர் பற்றி நிறைய விமர்சனங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கும் என்று எனக்கு தெரியும். நீங்கள் சிலவற்றை கேட்பீர்கள் சிலவற்றை கண்டு கொள்ள மாட்டீர்கள். நாங்கள் தற்போது நல்ல நிலையில் தான் இருக்கிறோம்”

இதையும் படிங்க : 3வது டி20.. நேர்மை எங்க போச்சு கம்பீர்.. ரசிகர்கள் விமர்சனம்.. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

“கேமரூன் கிரீன் சிறப்பானவர் மற்றும் திறமையானவர். அவருக்கு நிறைய வயது இருக்கிறது. இப்பொழுது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் துரதிஷ்டவசமானது. இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பது அவருக்கு தெரியும். அவர் மீண்டு வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -