இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் பயிற்சியாளர் கம்பீர் எடுத்த ஒரு முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். மேலும் இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங்குக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ரவி பிஸ்னாய் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
கம்பீர் மீதான விமர்சனம்
இந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
தற்போது ஹர்ஷித் ராணா இந்திய அணிக்காக அறிமுகமாகாததால், அவரை ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக அன்கேப்ட் பிளேயர் முறையில் வெறும் நான்கு கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ஐபிஎல் அணிக்காக கம்பீர் இவ்வாறு செய்திருக்கிறார் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது விமர்சனம் செய்து வருகிறார்கள்.
உண்மையில் நடந்தது என்ன?
இன்று போட்டி நடைபெறும் ஹைதராபாத் மைதானத்திற்கு ஹர்ஷித் ராணா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மைதானத்திற்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 278/3.. புஜாரா அணிக்கு தமிழ்நாடு அணி பதிலடி.. சாய் சுதர்ஷன் ஜெகதீசன் அதிரடி.. ரஞ்சி டிராபி 2024
இதன் காரணமாகவே இன்று அவருக்கு இந்திய அணியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு தள்ளிப் போய் இருப்பதாக தெரிகிறது. அதே சமயத்தில் டாஸ் நிகழ்வு முடிவடைந்ததும் சமூக வலைதளங்களில் ஹர்ஷித் ராணாவை கம்பீர் அறிமுகப்படுத்தாதது குறித்து ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.






