நாளை இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று கோடிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்று தொடரையும் கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் கவனிக்கும் ஹர்ஷித் ராணா விவகாரம்
இந்த தொடரில் ஐபிஎல் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நிதீஷ் குமார் மற்றும் லக்னோ அணிக்காக விளையாடும் மயங்க் யாதவ் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டார்கள். எனவே இவர்கள் இருவரையும் அன் கேப்ட்டு வீரர்களாக நான்கு கோடிக்கு இரண்டு அணிகளும் தக்க வைக்க முடியாது. ஏனென்றால் இந்திய அணிக்கு அறிமுகம் ஆகிவிட்டார்கள்.
தற்போது இதே வரிசையில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் ஹர்ஷித் ராணா இருக்கிறார். அவரை இந்தப் போட்டியில் கம்பீர் அறிமுகப்படுத்தவில்லை என்றால், கொல்கத்தா அணி அவரை நான்கு கோடி ரூபாய்க்கு எளிதாக தக்க வைத்துக் கொள்ளும். எனவே ஹர்ஷித் ராணாவை கம்பீர் இந்திய அணியில் அறிமுகப்படுத்துவாரா? என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. கிரிக்கெட் வல்லுனர்கள் கம்பீர் நேர்மையானவர் அறிமுகப்படுத்துவார் என்று கூறுகிறார்கள்.
சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இந்த தொடரில் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக இரண்டு போட்டியில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் மூன்றாவது வாய்ப்பையும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் தற்போது அணியில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் யாரும் கிடையாது. மேலும் கம்பீர் வாய்ப்புகளை தந்தால் முழுமையாக தருவார்.
அடுத்து வருண் சக்கரவர்த்தி இடத்தில் ரவி பிஸ்னாய் விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் வருண் சக்கரவர்த்திக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அவர் தன்னை நிரூபித்து விட்டார். எனவே கம்பீர் மீண்டும் பழைய வீரருக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நீ பேட்ஸ்மேன் கிடையாதுனு கம்பீர் அப்ப சொன்னார்.. அதுதான் சாதிக்க ஹெல்ப் பண்ணுச்சு – நிதீஷ் குமார் பேட்டி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி :
சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், நிதீஷ் குமார், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா ரியான் பராக் வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஸ்தீப் சிங்.






