நீ பேட்ஸ்மேன் கிடையாதுனு கம்பீர் அப்ப சொன்னார்.. அதுதான் சாதிக்க ஹெல்ப் பண்ணுச்சு – நிதீஷ் குமார் பேட்டி

0
1015
Gambhir

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற நிதீஷ் குமார் தன்னுடைய பந்துவீச்சில் கவுதம் கம்பீர் என்ன மாதிரியான தாக்கத்தை செலுத்தி இருக்கிறார்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.

இந்த இரண்டாவது டி20 போட்டியில் நிதீஷ் குமார் 34 பந்துகளில் 74 ரன்கள் அதிரடியாக எடுத்தார். இந்திய அணி டாப் ஆர்டரை 41 ரன்னில் இழந்திருந்த போது உள்ளே வந்து விளையாடிய அவர் பயமில்லாமல் அதிரடியாக விளையாடினார். இதேபோல பந்துவீச்சில் கடைசி கட்டத்தில் வந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

கம்பீரின் அற்புதமான அணுகுமுறை

இந்திய அணியில் சிவம் துபே மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இருப்பதால் நிதீஷ் குமார் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரையும் பரிசோதிப்பதற்கு இன்னொரு தொடர் வசதியாக அமையாது என்பதற்காக, உடனடியாக முதல் இரண்டு போட்டிகளிலும் இருவரையும் களம் இறக்கி விட்டார்.

அவரின் இந்த பரிசோதனை முயற்சிக்கு நல்ல முறையில் வெற்றி கிடைத்து இருக்கிறது. நிதீஷ் குமார் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும், வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். தற்போது இவர்கள் இந்தியாவின் பெஞ்ச் வலிமையை மிகவும் அதிகமாகி விட்டார்கள்.

- Advertisement -

நிதீஷ் குமார் சொன்ன சுவாரசிய விஷயம்

கம்பீர் குறித்து பேசி இருக்கும் நிதீஷ் குமார் கூறும் பொழுது “நான் விக்கெட்டுகளை கைப்பற்றியதற்கு உண்மையில் பயிற்சியாளர் கம்பீர் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர் என்னுடைய பந்துவீச்சின் மீது நான் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறினார். அவர் எனக்கு இதில் நிறைய நம்பிக்கையை கொடுத்தார். மேலும் நான் பந்து வீசும் பொழுது என்னை பேட்ஸ்மேன் என்பதை மறந்து விடச் சொன்னார். பந்துவீச்சாளராக என்னை நானே கருதி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். இதுதான் எனக்கு வேலை செய்தது”

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட்.. ரோகித் சர்மா ஆடுவதில் சிக்கல்.. மாற்று வீரராக இளம் வீரருக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்

“இந்தியாவுக்காக விளையாடுவது எனக்கு மிகவும் பெருமையான தருணம். இதில் ஆட்டநாயகன் விருது பெறுவது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். இதற்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். இந்தத் தருணத்தில் நான் வாழ விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -