தொடர்ந்து பவுன்சர் பந்துகள் போட்டுக் கொண்டே இருந்த ஜான்சன் ; பொறுமையை இழந்து பும்ரா முறைத்தல் – வீடியோ இணைப்பு

0
573
Jasprit Bumrah and Marco Jansen

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. காயம் காரணமாக கேப்டன் கோலி விலகிய நிலையில் தற்போது ராகுல் கேப்டனாக உள்ளார். மேலும் இந்த போட்டியில் ரகானே மற்றும் புஜாரா நிச்சயம் ரன் அடித்தாக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கி உள்ளனர்.

இந்த போட்டியின் கவனிக்கத்தக்கதாக அமைந்த மற்றொரு விஷயம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் மார்கோ யன்செனும் மோதிக் கொண்டது தான். இரண்டு வீரர்களுமே கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒன்றாக விளையாடினாலும் தற்போது இருவரும் கோபமாக வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். இருவருமே அந்தந்த அணிகளுக்கு முக்கியமான பந்துவீச்சாளர் என்பதால் ரசிகர்கள் இந்த காட்சியை கண்கொட்டாமல் பார்த்து வந்தனர்.

- Advertisement -

இந்திய அணியின் பும்ரா பேட்டிங் பிடிக்கும் போது தென்னாப்பிரிக்காவின் யென்சன் வரிசையாக பவுன்சராக வீசினார். அதில் சில பவுன்சர்கள் தொடர்ந்து பும்ராவின் தோள்பட்டையில் பட்டு சென்றது. இதனால் விரக்தி அடைந்த பும்ரா யன்செனிடம் கோபமாக சில வார்த்தைகளை பரிமாறி சென்றார். மீண்டும் பவுன்சராக யன்சென் வீச, பும்ரா மற்றும் யன்சென் இருவரும் மீண்டும் களத்திற்கு நடுவில் வந்து முறைத்துக் கொண்டனர். இதன் காரணமாக இருவருக்கும் நடுவில் அம்பயர் மரைஸ் எராஸ்மஸ் இடைபட்டு சமாதானம் செய்து வைத்தார். அதுவும் போக தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எல்கரும் இடையில் வந்து இருவருக்கும் இடையில் வந்து சமாதானம் செய்து வைத்தார்.

இதேபோல கடந்த இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் பும்ராவிடம் சிறிது முறைத்துக் கொண்டதால் அதன்பிறகு பும்ரா மிகவும் சிறப்பாக பந்துவீசி இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தார். அதே போல இந்தமுறையும் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.