இந்திய அணி நவம்பர் மாத இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் வெல்ல முடியுமா? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் பேசியிருக்கிறார்.
இந்திய அணி கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. மேலும் கடந்த ஐந்து முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை இந்திய அணி தக்க வைத்து வந்திருக்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த காலகட்டம் இந்திய அணிக்கு பொற்காலமானதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிநாடுகளில் கொடுக்க முடிவதால், இந்திய அணி வெளிநாடுகளில் போட்டியை வெல்வதோடு மட்டும் அல்லாமல் தொடரையும் வெல்ல முடியும் என்கின்ற நிலைக்கு வந்திருக்கிறது.
அதே சமயத்தில் இந்த முறை இந்திய அணியை உள்நாட்டில் வைத்து பெரிய அளவில் தோற்கடிக்க வேண்டும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் பல முயற்சிகள் செய்து வருகிறது. எனவே முதல் போட்டியை அதிவேகமான பெர்த் மைதானத்தில் கொடுத்திருக்கிறது. இரண்டாவது போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது. பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றதே கிடையாது.
இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை கடினமானதாக இந்திய அணிக்கு வைத்து, தொடரின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற திட்டமிடுகிறது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஹட்ரிக் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற முடியுமா? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க : எழுதி வச்சுக்கோங்க.. கரெக்டா அந்த டைம்ல இந்தியா டீம் பீஸ்ட் மோட்ல வரும் – தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
இதுகுறித்து வாசிம் ஜாபர் கூறும் பொழுது “பும்ரா, சமி, சிராஜ் உடல் தகுதியுடன் இருந்தால் அவர்கள் பெரும்பாலான தொடர்களில் விளையாட முடியும். எனவே ஆஸ்திரேலியாவில் அந்த அணியை தோற்கடித்து ஹாட்ரிக் டெஸ்ட் வெற்றியை இந்திய அணி பெறுவதற்கு சிறந்த வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இடது கை வேகபந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் கொண்டுவரப்படுவார். மேலும் இந்திய கிரிக்கெட்டின் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் டார்க் ஹார்சஸ் ஆக இருப்பார்” என கூறியிருக்கிறார்.






