எழுதி வச்சுக்கோங்க.. கரெக்டா அந்த டைம்ல இந்தியா டீம் பீஸ்ட் மோட்ல வரும் – தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

0
242
Dinesh

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களை முடித்துக் கொண்டு அடுத்து செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் முன்னணி வீரர்களுடன் விளையாடிய பொழுதும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோல்வியடைந்தது. குறிப்பாக வெல்வதற்கு வாய்ப்பு இருந்த ஒரு போட்டியையும் டை செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் திடீரென வலிமையாக தெரிந்த இந்திய அணி பலவீனமாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. எனவே அடுத்து சாம்பியன் டிராபி வரவிருக்கின்ற நிலையில் இந்திய அணி என்ன செய்யும்? என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படியான சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு கிரிக்கெட் ரசிகர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி என்ன செய்யும்? என்பது குறித்தான கேள்விகளை முன் வைத்தார்கள்.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” நான் முதலில் சாம்பியன்ஸ் டிராபி பற்றி பேச தொடங்குவோம். இங்கிருந்து அதற்கு நிறைய நேரம் இருக்கிறது. எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருவதற்கு முன்பாக நாம் நிறைய மாற்றங்களை சந்திக்க போகிறோம்.

நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறேன். இலங்கையில் விளையாடியதை விட ஒரு சிறந்த யூனிட் அடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும்.என்னால் மிக உறுதியாக சொல்ல முடியும் இந்திய அணியில் சில மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கப் போகிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் பிளேயர்ஸ் மேட்ச் பிக்சிங் பண்றோமா?.. எங்க டார்கெட் அதுதான் – ஷான் மசூத் பேட்டி

இந்திய அணி பெரிய தொடர்களுக்கு வரும் பொழுது முற்றிலும் வித்தியாசமான பீஸ்ட் மோடில் வருவார்கள். அவர்கள் பொதுவாகவே அப்படித்தான் செயல்படுவார்கள். எனவே மற்ற அணிகளுக்கு இந்திய அணியை பார்த்தால் இவர்கள் எப்பொழுதும் சிறப்பாக செயல்படுவார்கள் திறமையான அணி என்று தெரியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -