ரோகித் சுயநலமில்லாமல் ஆட தேவையில்லை.. அப்படிப்பட்ட ஒரு வேலையை ஏன் செய்யணும்? – சல்மான் பட் கேள்வி

0
406
Rohit

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்னலம் இல்லாமல் விளையாடுவது அவசியமற்றது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியிருக்கிறார். இது அணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் பாதிப்பை உண்டாக்குவதாக அவர் மேலும் விளக்கமாகப் பேசியிருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 230 ரன்களை துரத்தியது. இந்த நிலையில் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 47 பந்தில் 58 எடுத்து வெளியேறியதும் இந்திய அணி மொத்தமாக சரிந்தது.

- Advertisement -

இதே போல் இரண்டாவது போட்டியில் 241 ரன்கள் நோக்கி விளையாடிய நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 44 பந்தில் 64 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெளியேறியதும் இந்திய அணி அங்கிருந்து அப்படியே சரிந்து தோற்றுவிட்டது. மேலும் ரோகித் சர்மா தான் அதிரடியாக விளையாடுவதை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றும் நேற்று பேசி இருந்தார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறும் பொழுது ” இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் கட்டுப்பாடான சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லை. மேலும் இந்திய முன்னணி பேட்ஸ்மேன்களும் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக மிகவும் தடுமாற்றத்துடன் இருக்கிறார்கள். உண்மையில் இந்தப் போட்டியை கட்டுப்பாட்டில் வைத்து ஒருவர் வென்று இருக்க முடியும் என்றால் அவர் ரோஹித் சர்மா மட்டும்தான்.

- Advertisement -

அவர் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் விளையாடிய ஷாட் அவசியம் அற்றது. தனது அணி திணறுகிறது என்று தெரிந்தும், கடந்த ஓரிரு போட்டிகளாக சுழல் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுகிறார்கள் என்பது தெரிந்தும், தான் நல்ல பார்மில் இருப்பதாலும் ரோஹித் சர்மா நினைத்து விளையாடி போட்டியை முடித்திருக்க வேண்டும்.மேலும் இந்த இடத்தில் சுயநலம் இல்லாமல் விளையாட வேண்டிய அவசியம் கிடையாது.

இதையும் படிங்க: சவுத் ஆப்பிரிக்கா கொடுத்த பெரிய கவுரவம்.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு – தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி

மேலும் இந்திய வீரர்கள் விளையாட முடியாத அளவுக்கு இலங்கை பந்துவீச்சு இருந்தது என்றும் சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை என்று நினைக்கிறேன். டி20 கிரிக்கெட் ஆக இருந்தாலும் அல்லது பெரிய இலக்காக இருந்தாலும் ரோகித் சர்மா அப்படியான ஷாட் விளையாடியது தவறு கிடையாது. அவர் கடினமான பகுதியை கடந்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி எல்லாம் செய்த பிறகு ஏன் நிலைத்து நின்று ஆட்டத்தை முடிக்கவில்லை?” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -