இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றுக் கொண்டார். தற்சமயம் அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் பெரிய கௌரவம் ஒன்றை கொடுத்திருக்கிறது.
தற்பொழுது உலகெங்கும் நடக்கும் பிரான்சிசைஸ் டி20 லீக்கில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் முதல் இடத்தில் இருக்கிறது. ஐபிஎல் தொடரின் சரி பாதியில் கூட வேறெந்த நாட்டு டி20 தொடர்களும் கிடையாது. அந்த அளவிற்கு ஐபிஎல் தொடர் மிகப்பெரிய அளவில் வருமான ரீதியாக வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற தொடராக சவுத் ஆப்பிரிக்கா நடத்தும் டி20 லீக் தொடர் இருக்கிறது. இது எதிர்கால ஒட்டுமொத்த சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டுக்கும் தேவையான நிதியை உருவாக்கக் கூடியதாகவும், கிரிக்கெட் விளையாடும் ஆர்வமுள்ள இளைஞர்களை உருவாக்குவதற்கும் முக்கிய கருவியாக இருக்கப் போகிறது.
இந்த நிலையில் சவுத் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கை தாங்கள் நடத்திவரும் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் போட்டியின் தூதுவராக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியா மற்றும் பிரிட்டனில் தங்கள் தொடரை விளம்பரப்படுத்துவதற்கு தினேஷ் கார்த்திக் முக்கியமானவராக இருப்பார் என கருதுகிறது. கிரிக்கெட் வர்ணனையாளராக இங்கிலாந்திலும் தினேஷ் கார்த்திக்குக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “நான் இதுகுறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது உலகில் நடக்கும் சிறந்த பிரான்சிசைஸ் டி20 லீக்கில் மிக முக்கியமானது. இந்த தொடரின் பிராண்ட் தூதுவராக என்னை நியமிக்கப்பட்டதற்கு நான் பெருமைப்படாமல் இருக்க முடியாது. இதில் பங்கேற்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இதையும் படிங்க : ஷிவம் துபே எதுக்கு?.. அந்த 33 வயசு வீரரை கொண்டு வாங்க.. ஆள் வேற செம ஃபிட் – பாக் சல்மான் பட் அட்வைஸ்
இந்தத் தொடரை மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குடும்பத்துடனும் பார்ப்பதற்கு வருவார்கள். இதன் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. மேலும் இந்தத் தொடர் மிகவும் தரமானதாகவும் நடத்தப்படுகிறது. இதன் சவுத் ஆப்பிரிக்க கிரிக்கெட் பயனடைந்ததை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் பங்கேற்க என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.






