ஐபிஎல் தொடரில் குறைவான வருவாயை ஈட்டி வரும் 6 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்

0
257
Kane Williamson and Suryakamar Yadav

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஒரே நோக்கம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கிற கனவோடு ஒவ்வொரு நாளும் கிளம்பி வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப் பெரிய மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே. எந்த நோக்கத்திற்காக ஐபிஎல் தொடர் துவங்க பட்டதோ, அந்த நோக்கம் இன்று கடைசியில் நிறைவேறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

தெருக்களில் விளையாட ஆரம்பித்து படிப்படியாக டிஸ்றிக்ட் லெவல், ஸ்டேட் லெவல் என அடுத்தடுத்து முன்னேறி ரஞ்சி டிராபி தொடர் வரை விளையாடி வந்த வீரர்கள், தற்பொழுது ஐபிஎல் தொடரில் விளையாட ஆரம்பித்து இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். உதாரணத்திற்கு இந்திய அணியில் தற்பொழுது உள்ள v ஹர்திக் பாண்டியா, பும்ரா, சஹால், தீபக் சஹர் போன்ற வீரர்களே மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

- Advertisement -

கிரிக்கெட்டை ஆதரிக்கும் வகையில் ஐபிஎல் தொடர் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபக்கம் இதனுடைய வியாபாரம் பற்றி தெரிந்து கொள்ளத் தொடங்கினால் நாம் மயங்கி விழவும் வாய்ப்பு உள்ளது. உலக அளவில் பல டி20 தொடர் நடந்து வந்தாலும், இந்தத் தொடரில் மூலம் கிடைக்கும் வருவாய் வேறு எந்த தொடரிலும் கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. கோடிக்கணக்கில் பணம் கொட்டும் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மிக கம்மியான வருவாயை ஈட்டி வருகின்றனர். அவர்கள் யார் என்று தற்போது பார்ப்போம்.

ஜஸ்பிரித் பும்ரா

இவருக்கு மிகப் பெரிய அறிமுகம் தேவையில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் டெத் பௌலராக தன்னை செதுக்கிக் கொண்டு, தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு ஐபிஎல் தொடருக்கு, இவர் பெற்று வரும் வருமானம் 7 கோடி ரூபாய் ஆகும்.

மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இவருடைய வருவாய் சற்று அதிகமாக தெரிந்தாலும், இவருடைய ஆட்டத்திற்கும் இவருடைய பங்களிப்புக்கும் இது மிக மிக குறைந்த வருவாயாகும். உதாரணத்திற்கு பும்ராவை விட அனுபவம் குறைந்த ரிலே மெரிடித் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார். அவருடைய வருவாய் பும்ராவை விட மிக மிக அதிகமாகும்.

- Advertisement -

கேன் வில்லியம்சன் – 3 கோடி

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சமீபத்தில் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் நியூசிலாந்து அணியை எவ்வாறு தலைமை தாங்கி கொண்டு வருகிறார் என்பது நம் அனைவரும் தெரிந்த விஷயம் தான். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தற்போது தலைமை தாங்கி வருகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவரை ஆரம்பத்தில் ஹைதராபாத் அணி மிக குறைந்த விலையில் ஏலத்தில் எடுத்தது. ஆனால் தற்பொழுது அவர் தன்னுடைய டி20 கேரியரை நன்கு வடிவமைத்துள்ளார். ஆரம்பத்தில் குறைவான விலைக்கு போன காரணத்தினால், அவருடைய வருமானம் இன்றும் 3 கோடி ரூபாயாக மட்டுமே உள்ளது. அவரது அணியில் விளையாடும் சக கிரிக்கெட் வீரர்கள் இவரைவிட அதிக வருவாயை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மயங்க் அகர்வால் – 1 கோடி

பஞ்சாப் கிங்ஸ் அணியில் நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது கடந்த சில வருடங்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வழங்குவதில் பெயர் போனவர் மயங்க் அகர்வால். டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவரை 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி ஒரு கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது. பஞ்சாப் அணியில் தற்போது அவர் சக்கை போடு போட்டு வருகிறார்.

பஞ்சாப் அணிக்காக மயங்க் அகர்வால் விளையாடி வரும் விதத்திற்கும், அவருடைய தொடர்ச்சியான சிறந்த பங்களிப்புக்கும் தற்பொழுது அவர் பெற்று வரும் வருமானம் மிகமிக குறைவு.

தீபக் சஹர் – 80 லட்சம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் அந்த அணியின் ஒரு மிகப்பெரிய தூணாக தீபக் சஹர் கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அவருடைய அற்புதமான ஆட்டத்தை கண்டு ஈர்ந்த பிசிசிஐ இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பையும் சமீபத்தில் அவருக்கு கொடுத்தது.

பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் இவருடைய ஆட்டம் மிக அற்புதமாக இருக்கும் என்பதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டி-20 தொடரே சாட்சி. இவ்வளவு சிறப்பாக விளையாடி வரும் இவர் தற்பொழுத பெற்று வரும் வருமானம் 80 லட்ச ரூபாய் மட்டுமே. தற்பொழுது அவர் பெற்று வரும் வருமானம் மிக குறைவாக இருந்தாலும் நிச்சயமாக அடுத்த ஆண்டு நடக்க இருக்கின்ற மெகா ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு இவர் விலை போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டர் 19 கிரிக்கெட் தொடரில் மிகச்சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி தொடரையும் கைப்பற்றினார். 2018ஆம் ஆண்டு இவருடைய சிறப்பான ஆட்டத்தை கண்ட டெல்லி அணி, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு இவரை விலைக்கு வாங்கியது.

பிரித்வி ஷா – 1 கோடியே 20 லட்சம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஓபனிங் வீரராக ஷிகர் தவானுடன் இவர் களமிறக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லி அணியின் தவிர்க்க முடியாத ஓபனிங் வீரராக தன்னுடைய பெயரை பிரித்வி நிலைநாட்டியுள்ளார். டெல்லி அணிக்காக இவருடைய ஆட்டம் அதிரடியாக ஒரு பக்கம்vஇருக்கும் நிலையில், இவருடைய வருமானம் மறுபக்கம் மிகக் குறைவாக உள்ளது குறிப்பிடதக்கது.

சூரியகுமார் யாதவ் – 3 கோடியே 20 லட்சம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிடில் ஆர்டர் வரிசையில் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய வீரராக சூரியகுமார் யாதவ் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பை அணி கோப்பையை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் சூர்யகுமார் கைகொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.

மிக அற்புதமாக விளையாடி வந்த அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இந்த ஆண்டு நனவானது. இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கிய போட்டியிலும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவதில் கைதேர்ந்த இவர் தற்பொது பெற்று வரும் வருமானம் சற்று குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.