“அம்பையர்ஸ் சிரிச்சிட்டு இருக்கீங்க! தோனிக்கு மட்டும் என்ன தனி சட்டமா”…..? – பிராட் ஹாக் கடும் தாக்கு!

0
2817

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று முதலாவது பிளே ஆப் போடி சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது .

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி சென்னை அணியை பேட்டிங் செய்ய பணிந்தது . இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது . அந்த அணியின் ருத்ராஜ் சிறப்பாக ஆடி 60 ரன்கள் சேர்த்தார் .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 173 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் 157 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது . இதனைத் தொடர்ந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது

நேற்றைய ஆட்டத்தின் போது சென்னை அணியின் பில்டிங் மற்றும் பந்துவீச்சு அருமையாக இருந்தது . மேலும் கேப்டன் தோனியின் கேப்டன்ஷிப் நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் நேற்று தோனி அமைத்த வியூகங்களும் பந்துவீச்சாளர்களை அவர் கையாண்ட விதமும் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சிகர்களிடையே மிகவும் பாராட்டப்பட்டது . நேற்றைய போட்டியில் சென்னை அணி தாமதமாக பந்து வீசியதால் இறுதி ஓவர்களில் நான்கு வீரர்களை மட்டுமே அவுட் ஃபீல்டில் ஃபில்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டது .

மேலும் பல நடுவர்களும் தோனியிடம் பந்து வீச தாமதமாவது குறித்து அடிக்கடி ஆலோசனை செய்து வந்தனர் . இந்த விஷயம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். போட்டியின் நடுவர்கள் வீரர்களிடமோ கேப்டன் இடமோ ஆலோசனை கேட்கக்கூடாது என்றும் அவர்கள் போட்டியை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தனது பேட்டியில் கோபம் உடன் தெரிவித்துள்ளார் .

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் அவர் ” தோனி தனது இரு போய் பயன்படுத்திக்கொண்டு நடுவர்களுடன் நான்கு நிமிட நேரம் விவாதத்தில் ஈடுபட்டு அவர்களைக் கவர்ந்தார் . இதனால் பத்திரனா நீண்ட இடைவேளைக்குப் பிறகு பந்து வீச வருவதற்கு கால் அவகாசம் கிடைத்தது . நடுவர்கள் இது போன்ற நேரங்களில் ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் . அதை விட்டுவிட்டு சம்பவத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கக் கூடாது” எனக் கூறியிருக்கிறார்.

மேலும் தோனி இது போன்ற சாதுரியமான திட்டங்களை பயன்படுத்தி தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்கிறார் எனவும் தெரிவித்திருக்கிறார் அவர் . நேற்றைய போட்டியில் களத்தடுப்பு மற்றும் பந்திவீச்சிக்கு சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தியது என சில நேரங்களை அதிகமாகவே சிஎஸ்கே அணி எடுத்துக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .