ஐபிஎல் பிளே ஆஃப்க்கு செல்லப் போகும் 4 அணி எது? 9 அணிகள் எந்த போட்டியை வென்றால் தகுதி பெறலாம்- விவரம்

0
2314

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக டெல்லி அணி வெளியேறி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி தற்போது 12 புள்ளிகளை பெற்றிருப்பதால் புள்ளி பட்டியலில் பெரிய அடிதடி நிகழ்கிறது.

இதனால் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியை பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் செல்லவில்லை. இந்த நிலையில் எந்த அணி எவ்வளவு போட்டிகளை வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

குஜராத் அணியை பொறுத்த வரை பெங்களூரு அல்லது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏதேனும் ஒரு வெற்றியைப் பெற்றால் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம். அப்படி இரண்டிலும் தோற்று விட்டால் மற்ற அணிகள் தயவு தேவைப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒன்றல் வெற்றி பெற்றால் போதுமானது.

மும்பை அணி தற்போது 14 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அவர்கள் எஞ்சிய இரண்டு ஆட்டத்தில் ஒன்றின் வெற்றி பெற்றால் கூட 16 புள்ளிகளை பெற்றுவிட முடியும். எனினும் ரன் ரேட் அவர்களுக்கு அதிகமாக இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடலாம்.

லக்னோ அணி தற்போது 13 புள்ளிகளுடன் இருக்கிறார்கள். மும்பை மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிராக இரண்டு ஆட்டங்களிலும் அவர்கள் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ராஜஸ்தான் தற்போது 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அவர்கள் எஞ்சிய ஆட்டமான பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணி வீழ்த்தினால் மட்டுமே அவர்கள் பதினாறு புள்ளிகள் பெற முடியும்.

- Advertisement -

பஞ்சாப் அணி தற்போது 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. அவர்கள் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணியை பெரும் ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும். பெங்களூர் அணி தற்போது 10 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் இருக்கிறது. அவர்கள் எஞ்சிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளை பெற முடியும்.

மேலும் அவருடைய ரன் ரேட் அதிகமாக இருக்க வேண்டும். கொல்கத்தா அணி எஞ்சி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை தான் பெற முடியும். எனினும் பல்வேறு போட்டிகள் அவர்களுக்கு சாதகமாக முடிய வேண்டும். ஆனால் அது நடக்காத காரியம்.

அதேபோன்று ஹைதராபாத் அணியில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளை பெற முடியும். இது போன்ற மற்ற அணிகளும் 14 புள்ளிகள் மட்டுமே பெற வேண்டும். அதில் ஹைதராபாத்  அதிக நேட் ரன் ரேட்டில் அவர்கள் பிளே ஆப்க்கு முடியும். ஆனால் இதுவும் நடக்காத காரியம்.