2022ஆம் ஆண்டுக்கான பெஸ்ட் டெஸ்ட் பிளேயிங் லெவன் தேர்வு செய்த கிரிக்இன்ஃபொ.. ஒரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!

0
2094

2022ம் ஆண்டுக்கான பெஸ்ட் டெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்தது கிரிக்இன்ஃபோ நிறுவனம்.

2022 ஆம் ஆண்டு நிறைவை எட்டியுள்ளது. கடைசியாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வரும் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. மற்ற அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நிறைவடைந்துவிட்டன.

- Advertisement -

இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரர்களை எடுத்துக்கொண்டு சிறந்த பிளேயிங் லெவனை உருவாக்கியுள்ளது கிரிக்இன்போ நிறுவனம்.

இந்த அணியில் துவக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த க்ரெய்க் ப்ராத்வெயிட் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த உஸ்மான் கவாஜா இருவரும் இருக்கின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தாண்டு ஓபனிங் பேட்டிங்கில் மிகச் சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். 687 ரன்கள் அடித்திருக்கும் இவரது சராசரி 62. 4 ஆகும். உஸ்மான் கவஜா 1080 ரன்கள் அடித்திருக்கிறார். 67.5 சராசரி வைத்திருக்கிறார். இதில் 4 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும்.

- Advertisement -

3வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மர்னஸ் லபுச்சானே இருக்கிறார். இவர் இந்தாண்டு 11 போட்டிகளில் 957 ரன்கள் அடித்துள்ளார். 56.29 சராசரி வைத்துள்ளார். 4 சதங்கள் 1 அரைசதம் அடங்கும். 4வது இடத்தில் சந்தேகமின்றி ஜோ ரூட் இருக்கிறார். 15 போட்டிகளில் 1098 ரன்கள் அடித்து, 45.75 சராசரி வைத்துள்ளார். இவர் 5 சதங்கள் 2 அரைசதங்கள் அடித்துள்ளார்.

5வது மற்றும் 6வது இடங்களிலும் இங்கிலாந்து வீரர்களே இருக்கின்றனர். பேர்ஸ்டோ 6 சதங்கள், 1 அரைசதம் மற்றும் 66.31 சராசரியுடன் 1061 ரன்கள் அடித்துள்ளார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 15 போட்டிகளில் 870 ரன்கள் மற்றும் 26 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

7வது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கிறார். இந்த அணியில் இருக்கும் ஒரே இந்திய வீரரும் இவரே. இந்தாண்டு பேட்டிங்கில் 64.2 சரசரியுடன் 578 ரன்கள் மற்றும் கீப்பிங்கில் 19 கேட்சுகள், 5 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

பந்துவீச்சில், ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் இருக்கிறார். இவர் 21 சராசரியுடன் 35 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அடுத்ததாக தென்னாபிரிக்கா வீரர் ரபாடாவிற்கு இடம்கொடுக்கப்பட்டுள்ளது. இவர் 47 விக்கெட்டுகளை 9 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். சராசரி 22.25 ஆகும்.

இந்த அணியில் இருக்கும் ஒரே சுழல்பந்து வீச்சாளர் நாத்தன் லையன். இவர் 11 போட்டிகளில் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். 9 போட்டிகளில் 36 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சராசரி 19.02 ஆகும்.