விராட் கோலி இங்கிலாந்தில் இங்கிலாந்துக்காக ஆடுகிறாரா?.. என்னால் இந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை – அஸ்வின் பேச்சு

0
0

​மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அடித்த அதிரடி சதம் மற்றும் அவருடைய ஆட்டத்திறன் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் வியந்து பாராட்டிப் பேசியிருக்கிறார்.

​நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கினாலும் கோலி வழக்கமான ஃபுளோவுடன் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

​அவருடைய இந்த அபாரமான ஆட்டம் மற்றும் பிட்னஸ் காரணமாக எதிர்வரும் உலகக்கோப்பைத் தொடரிலும் அவரும் ரோகித் சர்மாவும் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

​இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “விராட் கோலியின் பேட்டிங் மிகவும் பிரமாதமாக உள்ளது. அவர் இங்கிலாந்தில் இங்கிலாந்துக்காக விளையாடிக் கொண்டிருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகும் வந்து இதே ஃபுளோவுடன் பேட்டிங் செய்வது அத்தனை சுலபமல்ல”

- Advertisement -

“இது மிகவும் அசத்தலானது. விராட் மற்றும் ரோகித் குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற பேச்சுக்கள் இருந்தாலும் இது நடக்கும் என்று நமக்கு முன்பே தெரியும். சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமே இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -