அபிஷேக் ஷர்மா யார்கிட்டயும் தன்னை நிரூபிக்க வேண்டியது இல்லை.. அவர் கேரக்டர் இப்படித்தான் – ரகானே பாராட்டு

0
0

​ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேக செஞ்சூரி அடித்து அசத்திய இளம் ஓப்பனர் அபிஷேக் சர்மா யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று இந்திய முன்னாள் கேப்டன் ரஹானே பாராட்டிப் பேசியுள்ளார்.

​ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் 30 பாலில் செஞ்சூரி அடித்த இவர், தொடர் நாயகன் விருதையும் வென்றார். இதன்மூலம் ஜிம்பாப்வே தொடரில் அடைந்த பின்னடைவுகளுக்குப் பதிலடி கொடுத்து, ஆசிய விளையாட்டுகளுக்குத் தயாராகியுள்ளார்.

- Advertisement -

​களத்தில் அதிரடி காட்டும் இவர், வெளியிலும் மிகவும் அமைதியான மற்றும் கூலான பிளேயராகவே வலம் வருகிறார். இவரது இந்த மனப்பக்குவம் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவுகிறது.

​இதுகுறித்து அஜிங்கியா ரஹானே பேசும்போது, “எனக்குத் தெரிந்தவரை அவர் யாருக்கும் எதையும் நிருபிக்க வேண்டிய அவசியமில்லை. தன்னைத்தானே எப்படி மெச்சப்படுத்திக் கொள்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார். மைதானத்திற்கு வெளியே அவர் மிகவும் பிந்தாஸ் கேரக்டர், அதேபோல்தான் மைதானத்திலும் கூலாக இருப்பார். விளையாட்டில் தோல்விகள் வருவது சகஜம், ஒருவர் சிறப்பாக ஆடினாலும் ஆடவிட்டாலும் மக்கள் பேசத்தான் செய்வார்கள். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தெரிந்த மெச்சூர் பிளேயர் அவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து அபிஷேக் சர்மா பேசும்போது, “ஒன்று அல்லது இரண்டு தொடர்களில் சிறப்பாக ஆடவில்லை என்பதற்காக நாங்கள் மோசமான டீம் ஆகிவிட மாட்டோம். எந்த டீமுடன் விளையாடினாலும் பௌலிங் அட்டாக்கை டாமினேட் செய்யவே விரும்புகிறோம். ஒரு கிரிக்கெட்டராக பெர்ஃபார்மன்ஸ் ஏற்ற இறக்கமாக இருக்கும், ஆனால் நாங்கள் ஒரு யூனிட்டாக செயல்பட்டு அடுத்த மேட்சில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -