மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக, இந்திய அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியின் திறமை குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டிப் பேசியுள்ளார்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் மிகச் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்திய இவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் 776 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஸ்குவாடிலும் இவர் இடம் பிடித்துள்ளார்.
இந்திய பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அணியின் ஓப்பனிங் பொசிஷனில் ஆடும் பிளேயர்களுக்கு இவர் ஒரு சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சனத் ஜெயசூர்யா பேசும்போது, “அவர் ஒரு வித்தியாசமான திறமை வாய்ந்த பிளேயர். அவர் இந்தியாவின் ஃபியூச்சர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு இன்னும் நிறைய டைம் இருக்கிறது. எனவே அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர் சிறப்பாகச் செயல்படுவார். வாய்ப்புகள் நிச்சயமாக வரும். அவர் எந்த பொசிஷனில் பேட்டிங் செய்வார் என்று என்னால் சொல்ல முடியாது, அது சூழ்நிலையைப் பொறுத்தது. ஆனால் வாய்ப்பு வரும்போது அதை அவர் பயன்படுத்திக் கொள்வார். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம். செலக்ஷன் மற்றும் பேட்டிங் லைன்-அப் பற்றி என்னால் கமெண்ட் செய்ய முடியாது. அவர் மிகவும் திறமையான பிளேயர்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு கிரிக்கெட்டர்களுக்கும் தனித்தனி டேலன்ட் இருக்கிறது. அவர்கள் பிராக்டிஸ் மற்றும் டிரெய்னிங்கில் கடினமாக உழைக்கிறார்கள். இந்தியாவில் எப்போதும் ஒருவர் இடத்தை பிடிப்பதற்கும், பெர்ஃபார்ம் செய்வதற்கும் மற்ற பிளேயர்கள் ரெடியாக இருக்கிறார்கள். இங்கு காம்படிஷன் அந்த அளவுக்கு அதிகமாக உள்ளது” என்று கூறி இருக்கிறார்.






