பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சந்தித்து வரும் கடுமையான சரிவு மற்றும் நெருக்கடி நிலைக்கு, கடந்த இரண்டாயிரத்து இருபத்து ஒன்றாம் ஆண்டு டி20 வேர்ல்ட் கப் தொடரில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற வெற்றியே முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் பிளேயர்கள் தங்களை பெரிய சாதித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டனர். மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் கேப்டன்சி பதவிக்கான போட்டி உருவாகி அணியின் ஒற்றுமை சீர்குலைந்து மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக மோசமான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து வந்த காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பல மாற்றங்களை செய்து வருகிறது. பல கோச்கள் மாற்றப்பட்டும் பிளேயர்கள் யாரும் பொறுப்பேற்று விளையாடாத நிலையில் பிசிபி எடுத்த அதிரடி முடிவுகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இதுகுறித்து முகமது யூசுப் பேசும்போது “கடந்த இரண்டாயிரத்து இருபத்து ஒன்றில் இந்தியாவுக்கு எதிராக நாம் பெற்ற அந்த மேட்ச் வெற்றி தான் நமக்கு பெரிய டேமேஜ் செய்தது. அந்த வெற்றிக்கு பிறகு பிளேயர்கள் பெரிய சாதனையை செய்துவிட்டதாக நினைக்கத் தொடங்கிவிட்டனர். சிறப்பாக பெர்ஃபார்ம் செய்யும்போது பணிவாக இருக்க வேண்டும், ஆனால் காலரை தூக்கிவிட்டு மரியாதை இல்லாமல் நடந்து கொண்டால் பிரச்சனைகள் தான் வரும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் தொடர்ந்து கூறும்போது “அணியில் இருந்த அனைவரும் பாகிஸ்தான் டீமின் கேப்டன் ஆக முயற்சி செய்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உங்களுக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகிறது, ஆனால் எந்த பிளேயரும் பொறுப்பை ஏற்கவில்லை. அதனால் பிசிபி எடுத்த அதிரடி நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்று கூறி முடித்துள்ளார்.






