ஆர்சிபி மீது சிஎஸ்கே புகார்.. இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு.. காசி விஸ்வநாதன் கோபம்

0
25
Kasi

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்தில் தவறான முறையில் ரசிகர்களை தூண்டிவிடும் விதமாக பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியின் போது டிஜே சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், அதே நேரத்தில் சிஎஸ்கே பவுண்டரி எடுத்தாலும் விக்கெட் எடுத்தாலோ மிகவும் சத்தம் குறைவாகவும் பாடல்களை ஒலி பரப்பியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜிதேஷ் சர்மாவுக்கு நடந்தது

இதே போல சென்னையில் ஜிதேஸ் ஷர்மா கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட்டம் இழந்து வெளியேறும் பொழுது இட்லி தோசை சாம்பார் சட்னி என்ற பாடல் கேலி செய்வதற்காக டிஜேவால் ஒலிபரப்பப்பட்டது.

இந்த நிலையில் உடனடியாக தலையிட்ட சிஎஸ்கே அணி நிர்வாகம் இப்படியான பாடல்களை இனி ஒலிபரப்ப கூடாது என கண்டித்தது. ஆனால் ஆர்சிபி அணி நிர்வாகம் இதில் இன்னும் தலையிடவில்லை. எனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளது.

- Advertisement -

காசி விஸ்வநாதன் பேச்சு

மேலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த கேலியை தாண்டி சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்து வெளியேறி செல்லும் பொழுது அவர்கள் குறித்தும் டிஜே மைக்கில் தவறான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : குர்னால் பாண்டியா அடுத்து என்ன வீசுவாருனு எனக்கே தெரியாது.. இவங்க 2 பேரால என் வேலை ஈசி ஆயிடுது – ரஜத் படித்தார் பேச்சு

இதுகுறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பேசும்போது “மைதானத்தில் டிஜேயின் வேலை ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுதான். எதிரணி வீரர்கள் மற்றும் ரசிகர்களை காயப்படுத்துவது கிடையாது” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் மைதானம் மற்றும் சமூக வலைதளங்களில் எல்லை மீறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -