பாகிஸ்தான் ஜெயிக்க ஒரே வழிதான் இருக்கு.. முடிஞ்சா இத பண்ணி இந்தியாவை ஜெயிங்க – ஸ்ரீகாந்த் சவால்

0
11
Srikanth

இன்று இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் மிக முக்கிய போட்டி இன்று இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெறுவதால் இந்த போட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த பவுலர் இவ்வளவுதான்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாகிஸ்தான் அணி இந்தியாவை வெல்வதற்கு எந்த வழியில் வாய்ப்பு இருக்கிறது? அவர்கள் என்ன செய்தால் இந்திய அணியை வீழ்த்தலாம்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும்போது ” முதல் முறையாக அவர்கள் ஷாகின் அப்ரீடியை மட்டுமே வைத்துக் கொண்டு களம் இறங்கும் ஒரு போட்டியாக இது இருக்கப் போகிறது. அவரும் இப்பொழுது தான் பந்துவீச்சின் கூர்மையை இழந்துவிட்டார். அவரை நேராக இறங்கி வந்து தாக்கும் அளவுக்கு தான் இருக்கிறார். அவர்கள் வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரையும் உள்ளே கொண்டு வர முடியாது”

- Advertisement -

இதுதான் ஒரே வழி

“இப்போதைக்கு இந்திய அணி சுழல் பந்துவீச்சில் கொஞ்சம் தடுமாற்றத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் வேகப்பந்து வீச்சில் இந்திய அணிக்கு எந்தவிதமான தடுமாற்றமும் கிடையாது. எனவே பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணியை மறக்க நினைக்கலாம். அவர்கள் சரியாக அணியை தேர்ந்தெடுத்தால் ஐந்து சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளே இருப்பார்கள்”

இதையும் படிங்க : அமீர் இனி ட்ராமா வேணாம்.. அபிஷேக் உங்க கனவுல அடுத்த ஆறு மாசம் இருப்பாரு – ஹர்பஜன் சிங் பேச்சு

” அடுத்து பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 170 ரன்கள் எடுக்க வேண்டும். பிறகு அவர்களுடைய சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். அப்போது எல்லா ஓவர்களுமே இந்திய அணிக்கு அழுத்தமானதாக அமையும். இதை செய்யாவிட்டால் பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை வெல்லவே முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -