பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமத் அமீர் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பந்தை பார்த்து சுற்றக்கூடிய சாதாரண பேட்ஸ்மேன் என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு பேசி இருந்த முகமத் அமீர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா முழுமையான பேட்ஸ்மேன் கிடையாது அவர் ஒரு ஸ்லாகர், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சிறப்பாக பேட்டிங் செய்தால் மட்டுமே அவரை ஏற்றுக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தார்.
சிக்ஸரை அடிக்கட்டும்
இது குறித்த ஹர்பஜன் சிங் பேசும் பொழுது ” சரி இப்ப நான் இதுக்கு என்ன செய்யணும்? அமீர் ஏதோ சொல்றார். அவர் சொல்லட்டும். நீங்க அவரை ஒரு ஸ்லாகர் என்று சொல்வதால் எந்த பிரச்சனையும் கிடையாது. அபிஷேக் சர்மா சிக்ஸர் மட்டுமே அடிக்கட்டும். ஆனா அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன். அவரிடம் எல்லா ஷாட்டும் இருக்கிறது”
“பந்து எங்கிருந்து வருகிறது என்பதை அவர் நன்றாக அறிவார். அவர் அதற்கேற்றபடிதான் விளையாடுகிறார். அவர் கவர், பாயிண்ட், லாங் ஆன், லாங் ஆப் மற்றும் மிட் விக்கெட் என எல்லா திசைகளிலும் ஷாட் வைத்திருக்கக் கூடிய பேட்ஸ்மேன்”
இனி டிராமா வேண்டாம்
“உண்மையாக பந்தை பார்க்காமல் சுற்றக்கூடிய ஸ்லாக்கர்கள் யார் என்று நான் சொன்னால் சிலர் கோபப்படலாம். நான் மேலும் இதில் டிராமாவை உருவாக்க விரும்பவில்லை. யாரையும் வெறும் ஸ்லாகர் என்று சொல்வது நியாயம் இல்லை. அபிஷேக் ஷர்மா ஒரு உயர்தர பேட்ஸ்மேன். அவர் ஏற்கனவே தன்னை உலக கிரிக்கெட்டில் நிரூபித்திருக்கிறார்”
“அபிஷேக் ஷர்மா தான் கிரீசில் இருந்தால், தான் யார் என்பதை அவர் எல்லோருக்கும் ஞாபகப்படுத்தி விடுவார். கடந்த நான்கைந்து மாதங்களாக அவர் உங்களுடைய கனவில் இருந்து வருகிறார். நாளை சிறப்பாக விளையாடினால் மீண்டும் ஒரு ஆறு மாதத்திற்கு அவர் உங்கள் கனவில் தொடர்வார்” என்று கூறி இருக்கிறார்.






