இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய டெஸ்ட் அணியின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்து வருகின்ற காரணத்தினால் உள்நாட்டில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக வைட் வாஸ் ஆகி அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கம்பீருக்கு அழுத்தம் இருக்கிறது
இதுகுறித்து டெம்பா பவுமா கூறும் பொழுது ” சிவப்பு பந்து அணியை பொறுத்தவரையில் இந்திய அணி தற்போது மாற்றத்தில் இருக்கும் அணி. இதற்காக கண்டுபிடிப்பதற்கு இந்திய கிரிக்கெட்டில் தனித்துவமான எதுவும் கிடையாது. இதன் காரணமாக கம்பீருக்கு அதிகப்படியாக அழுத்தம் இருக்கிறது. மேலும் அவர் இதை சந்திக்கும் பொழுது ஏற்றுக் கொண்டாக வேண்டும்”
“சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தனக்கான நேரத்தை உருவாக்குவதற்கு அவர் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கிடைக்கும் நம்பிக்கையை அவர் இதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்”
விராட் கோலி ரோகித் சர்மா இருக்கிறார்கள்
“குறைந்தபட்ச ஓவர்கள் கிரிக்கெட்டில் இந்தியா தேர்வு செய்வதற்கு நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். 2026 டி20 உலகக் கோப்பை தொடரும் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனென்றால் இது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது”
இதையும் படிங்க : 5வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முழு பலத்தை காட்டும் கம்பீர்.. டி20 உலக கோப்பைக்கு ஒத்திகை
“ஒருநாள் கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பொறுப்பு எடுத்துக் கொள்வதற்கு இருக்கிறார்கள். அவர்கள் அதை முழுவதுமாக பார்த்துக் கொள்வார்கள். இந்த வடிவங்களில் கம்பீருக்கு பிரச்சனை இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் இந்திய அணிக்கு எதிர்காலம் கடினமானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






