என் மைதானத்தில் இன்னொரு முறை நீ இதை செய்ய வேண்டாம்னு தோனி எச்சரித்தார்.. திகைத்துப் போனேன் – பிராவோ பகிரும் அனுபவம்

0
241

5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டிவைன் பிராவோ.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு பிராட்காஸ்ட் நிகழ்ச்சியில் எம்எஸ் தோனி தன்னிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்த டிவைன் பிராவோ, இரண்டு முறை அதிக விக்கெட் வீழ்த்தி ஊதா நிற தொப்பியை கைப்பற்றி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற ஐபிஎல் கோப்பைகளில் அதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறலாம். அந்த அளவிற்கு சென்னை அணியின் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் தற்போது கொல்கத்தா அணியில் பவுலிங் கோச்சாக பணியாற்றி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் சூதாட்டப் புகாரில் சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடை பெற்று 2018 ஆம் ஆண்டு திரும்பவும் ஐபிஎல் தொடருக்குள் வந்தது. அப்போது ஒரு போட்டியில் லாங் ஆன் திசையில் பிராவோ ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது ஒரு கேட்ச்சை டைவ் அடித்து பிடித்து அசத்தியிருப்பார். இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி இன்னொரு முறை அது போல முயற்சி செய்ய வேண்டாம் என்று தன்னிடம் கூறியதாக அதற்கான காரணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “2018 ஆம் ஆண்டு தடை முடிந்து நாங்கள் மீண்டும் திரும்பி வந்த போது ஒரு போட்டியில் நான் லாங் ஆன் திசையில் டைவ் அடித்து கேட்ச் செய்தேன். அப்போது எனக்கு 34 வயதாக இருந்தது. அந்த சமயத்தில் தோனி என்னை மைதானத்தில் உள்ளே அழைத்தார். அந்த ஓவர் முடிந்ததும் அவர் என்னிடம் வந்து ‘இனிமேல் ஒருபோதும் என் கிரிக்கெட் மைதானத்தில் டைவ் அடிக்காதே. நீங்க ரன்கள் சேமிப்பதை விட உன்னுடைய நான்கு ஓவர்கள் மிகவும் முக்கியம்’ என்று கூறினார்.

இதையும் படிங்க:தோனி மாதிரி என்னால இதை செய்ய முடியும்னு சொன்னால்தான் ருத்ராஜ் திரும்ப இந்திய அணியில் இடம் பெறுவார் – ஸ்ரீகாந்த் பேட்டி

அவர் அப்படிச் சொன்ன போது நான் திகைத்துப் போனேன். அதற்குப் பிறகு நான் வட்டத்திற்குள் பீல்டிங் செய்ய தொடங்கினேன். அதுதான் அவர் செய்யும் வழக்கம், உங்களுக்கு எது நன்றாக வரும் என்பதை அவர் நன்றாக அறிவார். நீங்கள் வேறு யாராகவோ இதை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களிடம் என்ன இருக்கிறது என்ன தேவை என்பதை தோனி நன்றாக அறிவார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -