இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரானது வருகிற 11ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கடத்த தென்னாப்பிரிக்க தொடரில் சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் நியூசிலாந்து தொடரில் இடம் பெறாதது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிய போது மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ருத்ராஜ் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் அணியில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
மேலும் காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிய சுப்மான் கில் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயரும் அணிக்கு திரும்பி துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூல்நிலையில் ஸ்ரீகாந்த் ருத்ராஜ் இடம் பெறாதது குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒருவேளை ருத்ராஜ் நான் மகேந்திர சிங் தோனியுடன் விளையாடி இருக்கிறேன். இதனால் என்னாலும் அவரைப் போல கீப்பிங் செய்ய முடியும் என்று அவர் சொல்லலாம். அவர் அப்படி சொன்னால் மட்டுமே ஒரு நாள் அணியில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெறுவது உறுதி அதனால் அவர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ் 15 பேர் கொண்ட அணியில் அவர் நிச்சயமாக இடம் பெற்று இருக்க வேண்டும். நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் இடம்பெற்று இருக்கலாம்.
இதையும் படிங்க:சிராஜை டி20ல செலக்ட் பண்ணாத துரதிஷ்ட காரணம் இதுதான்.. வேற வழி இல்ல – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு
இந்த சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நீங்கள் சதம் அடித்தாலும் வாய்ப்புகள் இல்லை என்று கூறுகிறது. இதனால் ருத்ராஜ் மீண்டும் தொடங்கி மலை போல ரன்கள் குவிக்க வேண்டும். ஏனென்றால் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அடித்த சதத்தை மறந்து விடுவார்கள். அவரை இந்திய அணியில் இருந்தும் நீக்கி விட்டார்கள். இதனால் அவர் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.






