2026 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டதற்கு பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கும் என்று தாம் நம்பியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் 23 டி20 போட்டிகளில் 723 ரன்கள் அடித்துள்ளார்.
சராசரி 36.15, ஸ்ட்ரைக் ரேட் 164.13, ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். இருப்பினும், அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் தொடக்கத்தில் வெற்றிகரமான ஜோடி காரணமாக இடது கை வீரர் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக டி20ஐ கிரிக்கெட் ஆடவில்லை. 23 வயதான அவரது கடைசி டி20 போட்டி ஜூலை 2024ஆம் ஆண்டு நடந்தது.
ஜெய்ஸ்வாலை நினைத்தேன்:
இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சடகோபன் ரமேஷ், “அக்ஸர் படேல் துணை கேப்டனாக திரும்பியுள்ளார். அஜித் அகர்கர் ஏற்கனவே அக்ஸர் துணை கேப்டனாக இருந்ததை கூறினார். நானும் கில் டி20 அணியில் பொருந்த மாட்டார். அதற்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்க வேண்டும் என்று கூறினேன்.”
“கில் நீக்கப்பட்டதை பார்த்தவுடன் ஜெய்ஸ்வால் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு திருப்பம். ஜிதேஷ் ஷர்மா நீக்கப்பட்டார். இந்தியாவுக்கு மற்றொரு கீப்பர் தேவைப்படுவதால், உள்நாட்டு கிரிக்கெட்டில் புயலை கிளப்பிய இஷான் கிஷனை அழைத்துள்ளனர். இடம் அடிப்படையில் இது சரியான முடிவு” என்றார்.
சரியான முடிவு:
இஷான் கிசன் சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் கேப்டனாக ஜார்க்கண்ட் அணிக்கு வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்றார். 10 இன்னிங்ஸ்களில் 517 ரன்கள் குவித்தார், சராசரி 57.44 ஆகும்.
“ஜிதேஷ் ஷர்மா அணியில் இருந்து வெளியேறியதால், ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கிடைத்தது. அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை தொடக்க ஜோடியாக தேர்வு செய்தது சரியான முடிவு.”
இதையும் படிங்க: எங்க பஞ்சாப் பையன் கில்லை நீக்கியது சரியானது.. அகர்கருக்கு 10க்கு 10 மார்க் தருவேன் – ஹர்பஜன் சிங் பாராட்டு
“ஏனெனில் அவர்கள் இந்தியாவுக்கு டி20ஐ கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஜோடி. உலகக் கோப்பை வரை தொடக்க இன்னிங்ஸை ஆடுவோம் என்ற மனநிலையுடன் செல்வதால், அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று அவர் கூறினார். நடப்பு டி20 சாம்பியனான இந்தியா 2024இல் தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் வென்று இரண்டாவது பட்டத்தை வென்றது.






