டி20 உலகக் கோப்பை தொடருக்கு சிறந்த இந்திய அணியை இந்தியத் தேர்வு குழு தேர்வு செய்திருப்பதாக ஹர்பஜன் சிங் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக பஞ்சாப் மாநில கிரிக்கெட்டில் இருந்து வந்த கில் இருந்தார். இந்த நிலையில் அவரை டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறார்கள். தனது மாநில அணி வீரரை நீக்கி இருந்தாலும் ஹர்பஜன் சிங் அதனை வரவேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கில்லை நீக்கியது சரிதான்
தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்திய அணி மிகச் சிறப்பாக இருப்பதாகவும், மேலும் இந்த அணியில் ரிங்கு சிங் பினிஷர் ஆக உள்ளே வந்திருப்பது சிறந்த விஷயம் எனவும் ஹர்பஜன் சிங் மனம் திறந்து பாராட்டி பேசி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “வெளிப்படையாகவே கில் தன்னுடைய இடத்தை பெறவில்லை என்கின்ற உணர்வு இருந்திருக்க வேண்டும். ஆனாலும் தற்போது எடுக்கப்பட்டு இருக்கும் முடிவு சரியானது நான் இதை வரவேற்கிறேன். எல்லோரும் சொல்வது போல இது முடிவு கிடையாது. ஏற்கனவே இது போல நடைபெற்று இருக்கிறது. இங்கு டீம் காம்பினேஷனை வைத்து முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது”
இவர்கள் வந்ததில் மகிழ்ச்சி
” நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது என்னவென்றால் தற்போது இருக்கும் அணி சார்ந்த பிரச்சனைகளை அகர்கர் மற்றும் சூர்யா இருவரும் எவ்வாறு தீர்த்து வைக்கப் போகிறார்கள் என்றுதான். தற்போது சிறந்த முறையில் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து விட்டார்கள். இதற்குப் பத்துக்கு பத்து மதிப்பெண் கொடுக்கலாம்”
இதையும் படிங்க: U-19 ஆசியா கப் இந்தியா பாகிஸ்தான் பைனல்.. இந்தியாவில் எந்த டிவியில் பார்க்கலாம்.. எப்போது தொடங்குகிறது? – முழு தகவல்கள்
“தற்போது ரிங்கு அணிக்கு திரும்பி வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இசான் கிஷான் வந்து இருப்பதும் நல்ல விஷயம். அவர் காத்திருப்பில் இருந்த ஒரு முக்கியமான வீரர். அவர் எவ்வாறு உள்நாட்டு கிரிக்கெட்டில் செயல்பட்டார் என்பதற்கு, அவருக்கு நியாயமான இடம் கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






