கிரீனை வச்சு இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.. அதுக்குதான் உங்களுக்கு 3 பேர் இருக்காங்க.. கேகேரை எச்சரித்த அணில் கும்ப்ளே

0
421

19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மினி ஏலம் துபாயில் நேற்று நடைபெற்று முடிந்தது.

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிதாக வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் குறித்து அணில் கும்ப்ளே சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் எந்த அணிக்கு விளையாட போகிறார் என்பதே அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பாக அமைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாயும் சென்னை சூப்பர் கிங்ஸ் 40 கோடி ரூபாயும் வைத்திருந்த நிலையில் இரண்டு அணிகளும் அந்த வீரருக்கு தீவிரமாக போட்டி போட்டன. இறுதியில் அதிக தொகை வைத்திருந்த கொல்கத்தா அணி கிரீனை லாபகரமாக எடுத்தது.

ஐபிஎல் அதிகத் தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்கிற பெருமையை கிரீன் பெற்றார். அவரை கொல்கத்தா அணி 25.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சூழ்நிலையில் அணில் கும்ப்ளே அவர் தொடக்க இடத்தில் விளையாட வேண்டும் என்று அதற்கான காரணத்தை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “நான் அவரை கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரராக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் கேகேஆர் அணிக்கு பினிஷர் ரோலில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக அவர்களிடம் ரிங்கு இருக்கிறார். கடந்த சீசனில் அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் அவர்களது பேட்டிங் ஆர்டர் மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

இதையும் படிங்க:மும்பை அணி செஞ்சிருக்க காரியத்தை பார்த்து.. பல ஐபிஎல் அணிகள் இனி மினி ஏலத்தை விரும்ப மாட்டாங்க – அஸ்வின் பேட்டி

ரோமன் போவல், ரமன் தீப் சிங், ரிங்கு சிங் என்று 5, 6,7 பேட்டிங் வரிசை அபாரமாக உள்ளது. எனவே இந்த வேலையை செய்வதற்கு கிரீன் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். கேப்டன் ரகானே எந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறார் என்பதை பொறுத்து அவரை தொடக்க இடம் அல்லது மூன்றாவது இடத்தில் களமிறக்க வேண்டும். சுனில் நரேன் ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் தேவைக்கு ஏற்ப களமிறங்க முடியும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -