தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பவர் பிளேவில் இரண்டு விக்கெட் கைப்பற்றி ஹர்ஷித் ராணா சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் அவர் இந்த போட்டி குறித்து தற்போது பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் ஹர்ஷித் ராணாவுக்கு கம்பீர் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வருவது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
ஹர்ஷித் ராணாவின் தேவை
ஹர்ஷித் ராணா நன்கு உயரமானவர். மேலும் மணிக்கு தொடர்ச்சியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். இத்துடன் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக் கூடியவர். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் நான்காவது வேகம் பந்துவீச்சாளர் இடத்தில் இவரை விளையாட வைக்க இந்திய நிர்வாகம் முயற்சிகள் செய்து வருகிறது.
அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தால் அவருடைய இடத்திற்கு இவரை கொண்டு வந்து, பேட்டிங் வரிசையில் இவருக்கு எட்டாவது இடத்தை கொடுக்கவும் இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. இதன் காரணமாக இவரை வளர்த்தெடுப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறது.
இரவுதான் எனக்கு தெரியும்
இந்தப் போட்டி குறித்து ஹர்ஷித் ராணா பேசும் பொழுது “நான் அர்ஸ்தீப் சிங் உடன் இணைந்து புதிய பந்தில் பந்து வீச மிகவும் விரும்புகிறேன். குறிப்பாக அவர் ஒரு முனையில் இருந்து எதிரணிக்கு சிறப்பான முறையில் அழுத்தத்தை உருவாக்குவார. நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் அவருக்கு நிறைய அனுபவம் இருக்கின்ற காரணத்தினால், அவரால் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதால், அவருடன் இணைந்து விளையாட விரும்புகிறேன்”
இதையும் படிங்க: தெஆ டி20 தொடர்.. நட்சத்திர இந்திய வீரர் விலகல்.. இன்னொரு ஸ்டார் வீரரும் சந்தேகம் – கம்பீருக்கு நெருக்கடி
“நான் இந்த போட்டியில் விளையாடுவது எனக்கு அன்றைய நாள் நடு இரவில்தான் தெரியும். நான் இதற்கு முன்பாக தரம்சாலா மைதானத்தில் விளையாடியது கிடையாது. இங்கு நமக்கு வானிலையில் இருந்து வந்து வீசுவதற்கு உதவி கிடைப்பது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.






