ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் வென்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்காக அபாரமாக விளையாடினார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா இரு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றது. இரு டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, சராசரி 8.94 என்ற அபார சாதனையுடன் ஹார்மர் இந்த தொடரில் முக்கிய பங்காற்றினார். இது தென்னாப்பிரிக்காவின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் வென்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றி ஆகும்.
ஹார்மருக்கு விருது:
இந்த விருதை முதல் முறையாக வென்றது குறித்து ஹார்மர் அளித்த பேட்டியில், “நவம்பர் மாதத்திற்கான ஐசிசி ஆடவர் மாத வீரராக தேர்வு செய்யப்பட்டது ஒரு பெரிய கௌரவம். எனது நாட்டுக்காக விளையாடுவது ஒரு கனவு நனவாகும் விஷயம், அதனால் கிடைக்கும் எந்த அங்கீகாரமும் போனஸ் தான்.”
“இந்த விருதை எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது குடும்பத்தினருக்கு இதை அர்ப்பணிக்கிறேன், அவர்கள் என்னை விட்டு விலகி இருந்தாலும் எனது கனவை நிறைவேற்ற அனுமதிக்கின்றனர். தென்னாப்பிரிக்க அணியின் ஒரு பகுதியாக இருப்பது பெருமை.
சிறந்த வீராங்கனை யார்?
இந்த அற்புதமான குழுவுடன் இன்னும் பல வெற்றிகரமான சீசன்களை எதிர்நோக்கிறேன்” என்று கூறினார். பங்களாதேஷின் தைஜுல் இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டர் முகமது நவாஸை பின்னுக்குத் தள்ளி ஹார்மர் இந்த விருதை வென்றார்.
இதையும் படிங்க: டிராப் வேண்டாம்.. ஓய்வு கொடுங்கள்.. கில் குறித்து வார்த்தைகள் கொட்டிய இர்பான் பதான்
நட்சத்திர இந்திய பேட்டர் செபாலி வர்மா, நவம்பர் 2025-க்கான ஐசிசி மகளிர் விருதை வென்றார். 2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவரது அபார ஆல்-ரவுண்ட் செயல்திறன் இதற்கு காரணமாக அமைந்தது. இது குறித்து பேசிய அவர், “எனது முதல் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அனுபவம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. ஆனால் அது எனது கற்பனைக்கும் அப்பாற்பட்டு மிகச் சிறப்பாக முடிந்தது. இறுதிப் போட்டியில் அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடிந்ததற்கு நன்றியுள்ளவராக உள்ளேன்.”






