தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20ஐ தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கு முன்பாக துணைக் கேப்டன் ஷுப்மன் கில்லை ஓய்வில் வைக்குமாறு அணி நிர்வாகத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார். இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் கில் கட்டாக்கில் 4 ரன்கள், நியூ சண்டிகரில் 0 ரன்கள், தர்மசாலாவில் 28 ரன்கள் ஆகும்.
கில்லின் டி20ஐ பார்ம் சமீப காலமாக சிறப்பாக இல்லை. கடைசி 10 இன்னிங்ஸ்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 127.65 மட்டுமே உள்ளது. மேலும் போட்டியை தீர்மானிக்கும் பெரிய இன்னிங்ஸ் எதுவும் இல்லை. மற்ற வீரர்கள், குறிப்பாக சஞ்சு சாம்சன், தொடரின் மீதமுள்ள போட்டிகளில் வாய்ப்பு பெற காத்துள்ளனர்.
டிராப் வேண்டாம்..
இது குறித்து பேசிய அவர், “டிராப் என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள், அவருக்கு ஓய்வு கொடுக்கிறோம் அல்லது வேறு வீரரை முயற்சி செய்ய விரும்புகிறோம் என்று சொல்லுங்கள். ஆனால் இந்த இரு போட்டிகளிலும் புதிய வீரரை ஆட வைக்க வேண்டும்.”
“யாராக இருந்தாலும் அவர் அதற்கு தகுதியானவர். உரிமை உள்ளவர். அவர் நினைத்துக் கொண்டிருப்பார். கில் ஒரு வருடமாக ஆடுகிறார். நான் 2-3 மோசமான இன்னிங்ஸ்களுக்கு பிறகு டிராப் செய்யப்படுகிறேன். அந்த வீரர் சஞ்சு சாம்சன் தான். ஒன்று அல்லது இரண்டு வீரர்கள், எக்ஸ்-ஃபாக்டர் வீரர்களாக இருக்கலாம், அவர்களுக்கு வாய்ப்புகளில் கொடுக்கலாம்.”
மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு:
” ஆனால் சுப்மன் கில்லை பாருங்கள். இப்போது எத்தனை இன்னிங்ஸ்கள் ஆடிவிட்டார்? இப்போதுதான் இதைப் பற்றி பேச ஆரம்பித்தோம் என்று இல்லை, நீண்ட காலமாகவே பேசி வருகிறோம். இப்போது முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று இர்பான் பதான் கூறினார்.
இதையும் படிங்க: பதிரானாவ இந்த முறை சிஎஸ்கே வாங்காது.. அதுக்கு காரணமே சிஎஸ்கே சூப்பர் ஸ்டார் பிளேயர்தான் – ஸ்ரீகாந்த் பேச்சு
இந்தியா தர்மசாலாவில் நடந்த மூன்றாவது டி20யை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. நான்காவது மற்றும் ஐந்தாவது டி20ஐ போட்டிகள் முறையே டிசம்பர் 17 அன்று லக்னோவிலும், டிசம்பர் 19 அன்று அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளன.






