இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற அடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற உத்வேகத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் துணை கேப்டன் சுப்மான்கில் குறித்து சில முக்கிய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்து வரும் சுப்மான் கில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்து வரும் டி20 தொடரில் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி வந்தார். 4,0 என இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் நேற்றைய போட்டியில் 28 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். ஓரளவு நிலைத்து நின்று விளையாடினாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
இந்த சூழ்நிலையில் வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு தொடக்க இடம் கொடுக்க வேண்டும் எனவும் சுப்மான் கில்லை டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்துக்கள் கூறிவரும் நிலையில், இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “எனக்கு இது கொஞ்சம் கவலையாக உள்ளது. கில் தொடக்க வீரர்கள் மட்டுமல்லாமல் துணை கேப்டனும் கூட. அவரை எப்படி நீக்க முடியும் இது மிகவும் கடினமான முடிவாக இருக்கும். நீங்கள் அந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தால் இந்த தொடருக்குள் சாம்சனை அழைத்து வர முடியாது. துணை கேப்டனை நீக்குவது நன்றாக இருக்காது. கடந்த காலங்களில் துணை கேப்டன் நீக்கப்பட்டார்கள் என்பது குறித்து கேட்டால் அவருக்கு நியாயமான போட்டிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறுவேன்.
இதையும் படிங்க:நான் நெட்ஸில் நல்லாவே ஆடுறேன்.. ஃபார்ம்ல இல்லைன்னு சொல்ல முடியாது.. ரன்தான் வரல – சூரியகுமார் பேச்சு
இனி வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் நியாயமான முடிவை எடுக்க வேண்டும். இப்போது உங்களுக்கு சிறந்த லெவன் மற்றும் சிறந்த அணி தெரிந்திருக்க வேண்டும். பந்து வீச்சில் எந்த சந்தேகமும் இல்லை அது ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுவிட்டது. மேலும் ஹர்ஷித்ரானா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் இந்திய அணி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என்று அஸ்வின் பேசி இருக்கிறார்.






