தெஆ டி20 தொடர்.. 8 வரையில் பேட்டிங் வேண்டாம்.. இத செஞ்சாலே எதிர் டீமை முடிக்கலாம் – அஸ்வின் அறிவுரை

0
80
Gambhir

அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு இந்திய அணியின் வியூகங்கள் எப்படியாக இருக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது இந்திய அணி டி20 வடிவத்தில் உலக சாம்பியனாக இருக்கிறது. மேலும் தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டிய அழுத்தம் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

கண்டுபிடிக்க வேண்டிய இரண்டு விடைகள்

தற்போது இந்திய டி20 அணியின் பேட்டிங் யூனிட்டில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் விளையாடுவாரா? என்பது தெரிய வேண்டும். அப்படி அவர் விளையாடுவார் என்றால் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களம் இறங்குவார்? என்ற தெளிவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஜிதேஷ் சர்மா விளையாடுவார் என்றால், நேரடியாக அவர் கீழ் வரிசைக்கு வந்துவிடுவார் என்பதால் பிரச்சினை இல்லை.

அடுத்து பவுலிங் யூனிட்டில் அர்ஸ்தீப் சிங் விளையாடுவாரா இல்லை குல்தீப் யாதவ் தொடர்ந்து விளையாடுவாரா? என்பது குறித்த தெளிவும் தேவைப்படுகிறது. இதிலிருந்துதான் பேட்டிங் யூனிட் அதிகமாக 10 ரன்கள் எடுக்க வேண்டுமா இல்லையா? என்பது குறித்து தெளிவு கிடைக்கும். தற்போது கம்பீர் இந்த இரண்டு விஷயங்களுக்கும் விடை கண்டுபிடித்தாக வேண்டும்.

- Advertisement -

மிக முக்கிய விஷயம்

இந்திய அணி கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருமே துவக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து பேட்டிங் வரிசையில் யார் எங்கு வேண்டுமானாலும் களம் இறங்குவார்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இப்படி நடக்கும் பொழுது வீரர்களுக்கு ரோல் கிளாரிட்டி இருக்காது. இதன் காரணமாக அவர்களுடைய ஆட்டத்திறன் பாதிக்கப்படும்.

இதையும் படிங்க : தெஆ டி20 தொடர்.. 8 வரையில் பேட்டிங் வேண்டாம்.. இத செஞ்சாலே எதிர் டீமை முடிக்கலாம் – அஸ்வின் அறிவுரை

எனவே இந்திய அணி நிர்வாகம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் இந்த விஷயத்தில் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்பதால் தற்போதைக்கு இந்திய அணிக்கு இது மட்டுமே பிரச்சனையாக காணப்படுகிறது. இன்று தொடங்கும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் என்ன நடக்கிறது என்பதின் மூலம் முடிவுகளில் மாற்றம் வரலாம்.

- Advertisement -