தெஆ டி20 தொடர்.. 8 வரையில் பேட்டிங் வேண்டாம்.. இத செஞ்சாலே எதிர் டீமை முடிக்கலாம் – அஸ்வின் அறிவுரை

0
10
Ashwin

இந்திய டி20 அணியில் எட்டாம் இடம் வரையில் பேட்டிங் தேவைப்படாது, அதே சமயத்தில் பவுலிங் யூனிட்டை வலிமையாக வைத்து சென்று எதிரணியை மடக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று துவங்குகிறது. ஜி 20 உலகக் கோப்பைக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

- Advertisement -

பவுலிங் யூனிட் பிரச்சனை

இந்திய டி20 அணிக்கு எட்டாம் இடம் வரையில் பேட்டிங் இருக்க வேண்டும் என்றால், இந்திய பவுலிங் யூனிட்டில் ஒன்று அர்ஸ்தீப் சிங் இருக்க முடியாது. இல்லையென்றால் வருண் சக்கரவர்த்தி உடன் குல்தீப் யாதவ் விளையாட முடியாது. தற்போது இதற்கு விடை காண வேண்டிய அவசியத்தில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய டி20 அணியின் பேட்டிங் யூனிட் 7 வரையில் வைத்துக் கொண்டால் இந்திய பவுலிங் யூனிட்டை மிகவும் பலமானதாக அமைக்க முடியும். இதன் மூலம் எதிரணியை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தி, இந்திய பேட்டிங் யூனிட்டுக்கு குறைந்த வேலையை கொடுக்க முடியும். ஆனால் கம்பீர் இப்படி செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இது மிகவும் முக்கியம்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “தற்போது இந்திய டி20 பிளேயிங் லெவனில் இருந்து அர்ஸ்தீப் சிங்கை நீக்குவதற்கு எந்த காரணமும் கிடையாது. அவர் மிகவும் திறமையான இளம் பவுலர். அவருக்கு அணியில் என்ன மாதிரியான ரோல் கொடுக்கப்படுகிறது என்று நான் பார்க்க விரும்புகிறேன். எல்லா முக்கிய பவளர்களுடன் அவரும் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : முதல்ல சூரியகுமார் ரன் எடுக்கட்டும்.. அது நடக்கணும்னா இத செஞ்சே ஆகணும் – பார்த்திவ் படேல் பேச்சு

“பனிப்பொழிவு வரும் என்றால் மட்டுமே நாம் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் இருப்போம் என்று நினைக்கிறேன். ஆனாலும் கூட அர்ஸ்தீப் சிங் விளையாட வேண்டும். நாம் ஒரு நல்ல பௌலிங் யூனிட் உடன் செல்ல வேண்டும். பும்ரா, வருண், குல்தீப், ஹர்திக் பாண்டியா உடன் அர்ஸ்தீப் சிங் கட்டாயம் இருக்க வேண்டும். இவர்களால் எதிரணியை குறைந்த ஸ்கோருக்கு சுருட்டவும் முடியும், குறைந்த ஸ்கோரை காப்பாற்றவும் முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -