தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று வந்து வீச்சை தேர்ந்தெடுத்திருக்கிறது. மேலும் இரண்டு அணிகளும் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருக்கின்றன. எனவே இன்று நடைபெறும் மூன்றாவது போட்டி தொடரை முடிவு செய்யும் இறுதி போட்டியாக அமைந்திருக்கிறது.
இரண்டு அணியிலும் மாற்றம்
தென் ஆப்பிரிக்க அணியில் கடந்த போட்டியில் டோனி டி சோர்ஸி மற்றும் பர்கர் இருவரும் தசைப் பிடிப்பின் காரணமாக இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக ரியான் ரிக்டல்டன் மற்றும் பார்ட்மேன் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
அதே சமயத்தில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் ரோல் கிளாரிட்டி இல்லாமல் இருந்து வந்தது. எனவே அவருடைய இடத்தில் திலக் வர்மா இடம்பெற வேண்டும் என பலரும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் கம்பீர் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
சோகம் முடிவுக்கு வந்தது
இந்திய அணி தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் 20 டாஸ் தோற்று மோசமான சோகமான சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில் இன்று இந்திய அணி டாஸ் வென்று இந்த சோகமான சாதனைக்கு முடிவு கட்டி இருக்கிறது. மேலும் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் முதல்முறையாக இந்திய அணி டாஸ் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலுக்கு இனி வாய்ப்பு கிடைக்குமானு தெரியாது.. சோகம் என்னனா ருதுராஜுக்கும் அதேதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு
கடந்த இரண்டு போட்டிகளில் பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு விசாகப்பட்டினத்தில் இருக்காது என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது வெற்றி பெறும் சதவீதம் அதிகமாக இருக்கிறது. இந்த அடிப்படையில் தற்போது இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.






