இந்திய இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் இருவருக்கும் இனி இந்திய ஒருநாள் அணி பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஜெய்ஸ்வால் தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் வீண் அடித்திருக்கிறார். ருதுராஜ் தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பில் ஒரு சதம் அடித்து நிரூபித்து விட்டார். ஆனாலும் ரன் அடித்த ருதுராஜுக்கும் இந்திய ஒருநாள் பிளேயிங் லெவலில் வாய்ப்பு கிடைக்காது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
திரும்பி வரும் வீரர்கள்
இவர்கள் இருவருக்கும் பெரிய துரதிஷ்டமாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கில் மற்றும் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் காயத்தில் இருந்து திரும்பி வரும் பொழுது, உடனடியாக அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இதன் காரணமாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் இருவரும் 15 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றாலும் கூட, அவர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய கடினமான விஷயமாக மாறி இருக்கிறது. இதில் ரன் எடுத்துள்ள ருதுராஜுக்கும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பதுதான் பெரிய சோகமான விஷயம்.
இந்த வாய்ப்பை விடக்கூடாது
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ஜெய்ஸ்வாலுக்கு இன்று கிடைக்கும் வாய்ப்பு மூன்றாவது வாய்ப்பு. மேலும் அவர் இந்திய டி20 அணியிலும் கிடையாது. எனவே அவருக்கு மீண்டும் இப்படியான வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும் என உங்களுக்கும் எனக்கும் தெரியாது. அடுத்த ஒருநாள் தொடருக்கு கேப்டன் கில் வந்துவிடுவார். எனவே ஜெய்ஸ்வால் விளையாட முடியாது. எனவே அவருக்கு இது மிகவும் முக்கியமான போட்டி”
இதையும் படிங்க : யாருக்கும் நடக்காத தப்பு எங்களுக்கு நடக்குது.. அதுக்கு ஏதாவது செஞ்சு தொடரை ஜெயிக்கணும் – இந்திய துணை பயிற்சியாளர் கருத்து
“ருதுராஜுக்கும் இதுவே பொருந்தும். அவர் தற்போது சதம் அடித்திருக்கின்ற காரணத்தினால் அவர் குறித்த பேச்சு வேண்டுமானால் சுவராசியமாக இருக்கும். ஏனென்றால் அடுத்த தொடர் ஆரம்பிக்கும் பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் வந்துவிடுவார். அவர் துணை கேப்டனாகவும் இருக்கிறார். எனவே இவர்கள் இருவரும் உடனடியாக பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவார்கள். இவர்கள் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறலாம். ஆனால் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே இருவருக்குமே கடைசி போட்டி முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.






