489 ரன்.. தென்னாபிரிக்க ஆதிக்கம்.. இந்திய பவுலர்களை இனி இப்படி தான் திட்டுவோம்.. ஆகாஷ் சோப்ரா

0
47

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 489 ரன்கள் குவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி செல்லும் விதம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் சிறப்பாக முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து தென் ஆப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி மேற்கொண்டு இதைவிட அதிகமாக ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் முதல் போட்டி நடந்த கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக விக்கெட்டுகள் வீழ்ந்த போது ஆட்டம் விரைவாக முடிவுக்கு வந்தது.

ஆனால் இந்த ஆடுகளம் சற்று தட்டையாக காணப்படுவதால் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா, பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் இதே நிலையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் நாங்கள் கண்டோம் என்று அவர் சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “ஒரு மைதானத்தில் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய உதவி இருந்தால் நாங்கள் பேட்ஸ்மேன்களை விமர்சிக்கிறோம். அது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் பெர்த்தில் நடந்த விஷயம் போன்று இருக்கும். அது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பரப்பு என்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடந்தது போன்ற இருக்கும். ஆனால் ஆடுகளம் தட்டையாக இருந்தால் பந்து வீச்சாளர்களுக்கு திட்டம் இல்லையா? அவர்களிடம் எந்த ஐடியாவும் இல்லையா? என்ற கேள்வி எழும்.

இதையும் படிங்க:தெ.ஆ ஒருநாள் தொடர்.. விராட் கோலிக்கு அடுத்து நம்பர் 4ல் அவர்தான் விளையாடனும்.. ஸ்பெஷல் திறமை இருக்கு.. முகமது கைஃப்

இதற்கு முன்பாக அருண் ஜெட்லி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இதே முறையை நாங்கள் கண்டோம். அப்போது வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை அவ்வளவு எளிதாக எங்களால் வீழ்த்த முடியவில்லை. பேட்ஸ்மேன்கள் செய்யும் தவறுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கௌஹாத்தி டெஸ்ட் போட்டி இதேபோன்றுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆடுகளம் இதேபோன்று இருந்தால் இது மாதிரியான சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -