இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் கே எல் ராகுல் தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் அதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. சுப்மான்கில் காயம் காரணமாக இந்த ஒரு நாள் தொடரை தவறவிட, அவருக்கு பதிலாக ராகுல் கேப்டனாக அணியை வழிநடத்த இருக்கிறார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி திரும்பவும் ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் இதில் இடம் பெறவில்லை.
மாறாக ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், ருத்ராஜ் போன்ற வீரர்கள் ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு நாள் தொடரில் நான்காம் வரிசையில் இறங்கி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலக, அதற்கு பதிலாக நான்காம் வரிசைக்கு துருவ் ஜூரேல் பொருத்தமாக இருப்பார் என்று முகமது கைஃப் கருதுகிறார்.
இதற்கான காரணத்தை அவர் கூறும் போது ” என்னை பொருத்தவரை ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக நான்காம் இடத்தில் ஜூரேல் பேட்டிங் செய்ய வேண்டும். ஏனென்றால் அவரிடம் ஒழுங்கமைக்கப்பட்ட பேட்டிங் நுட்பம் உள்ளது. விக்கெட்டுகள் சீக்கிரமே இழந்தால் அவரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். மேலும் ஆட்டத்தை மாற்றி அமைக்கக்கூடிய நுட்பமும் அவரிடம் இருக்கிறது. நான்காம் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன் தேவை. குறிப்பாக அவர் கடந்த தொடர்களில் விராட் கோலிக்கு நிறைய உதவினார். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நிறைய உதவி இருக்கிறார்.
இதையும் படிங்க:ஒரே நாளில் இந்தியா 400 ரன்கள் அடிக்கனும்.. தென்னாப்பிரிக்க டெஸ்டில் வெற்றி பெறுவது குறித்து பார்த்தீவ் பட்டேல் கருத்து
ஐயர் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி தன்னை நிலைநாட்டினார். இதனால் இந்தியா பெரும்பாலான முறையில் ஆதிக்கம் செலுத்தியது. எனவே அவரைப் போன்ற ஒரு வீரர் அந்த வரிசைக்கு தேவை. முதல் ஆட்டத்தில் திலக் வர்மா மற்றும் ருத்ராஜ் போன்றோருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன் கே.எல் ராகுல் ஐந்து பேரில் ஒருவராக விளையாடுவார். இன்னர் நிதிஷ்குமார் ரெட்டி வாஷிங்டன் சுந்தர் ரவீந்திர ஜடேஜா என்று பேட்டிங் வரிசை 8 வரை இருக்கிறது. நிதீஷ் குமார் ரெட்டி முழுமையாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே இதற்கு ஹர்திக் பாண்டியா ஒரு மிஸ்ஸிங் தேர்வு” என்று அவர் பேசியிருக்கிறார்.






