கில் கம்பீர் ஐபிஎல் மாதிரி நினைச்சிட்டாங்க.. வீரர்களோட நம்பிக்கைய உடைச்சு நாசம் பண்றாங்க – ஸ்ரீகாந்த் வருத்தம்

0
30
Gambhir

நேற்று இரண்டாவது டி20 போட்டியில் சிவம் பேவுக்கு முன்பாக ஹர்ஷித் ராணாவை பேட்டிங் அனுப்பி வைத்தது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது இந்திய டி20 அணியில் பேட்டிங் வரிசையில் தொடக்க ஆட்டக்காரர்களை தவிர மற்றவர்களுக்கு என்ன இடம் என்றே தெரியாது நிலை இருக்கிறது. முழு ஆல்ரவுண்டராக இல்லாத ஹர்ஷித் ராணாவை சிவம் துபேவுக்கு முன்பாக அனுப்பி வைத்தது பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

தன்னம்பிக்கையை உடைக்கிறீர்கள்

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “நீங்கள் சிவம் துபேவின் திறமையை சீர்குலைக்கிறீர்கள். ஹர்ஷித் ராணா உங்களுக்கு அவ்வளவு பெரிய வீரரா? அவர் 35 ரன்கள் எடுத்தார். ஆனால் அது மிகவும் மோசமான ஆட்டம். அவர் ஒரு கட் அடித்தார் அப்புறம் ஒரு சிக்ஸர் அடித்தார். அதைத் தவிர அவர் வேறு எதுவும் சிறப்பாக செய்துவிடவில்லை”

“அவர் 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது அதிக பந்துகளை அவரே விளையாடிவிட்டார். இதன் காரணமாக அபிஷேக் ஷர்மா விளையாடுவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. மேலும் அவர் ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் வேறு எடுத்து சென்றார். 47 பந்துகள் கொண்ட அந்த பார்ட்னர்ஷிப்பில் ஹர்ஷித் ராணா மட்டுமே 33 பந்துகள் விளையாடினார். அபிஷேக் ஷர்மா மாதிரி ஒருவருக்கு 14 பந்துகள் மட்டுமே கிடைத்தது”

- Advertisement -

இது யாருடைய முடிவு?

“இதனால் அபிஷேக் ஷர்மாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருடைய ரிதம் பாதிக்கப்பட்டது. அவர் எடுத்த 35 ரன்கள் விலைமதிப்பற்றது என யாராவது சொல்லலாம். ஆனால் அதனால் என்ன பயன். இறுதியில் இது யாருடைய முடிவாக இருந்திருக்க முடியும். கேப்டனா அல்லது பயிற்சியாளர் கம்பீர் முடிவா?”

இதையும் படிங்க : நாளை உகோ பைனல்.. நிறைய தோத்து அழுது இருக்கேன்.. இனி முடியாது ஜெயிக்கணும் – ஹர்மன்பிரித் கவுர் பேட்டி

” முதலில் சிவம் துபே பவுலர், பேட்டர், பீல்டர் என எதற்காக தனிப்பட்ட முறையில் அவர் விளையாடுகிறார்? இறுதியில் நீங்கள் அவரை இப்படி நடத்தியதால் கடைசியாக அவர் எதுவுமே இல்லாமல் போய்விட்டார். நீங்கள் தன்னம்பிக்கையை உடைத்தது அவருக்கும் நல்லதில்லை இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்லது இல்லை. கடைசியாக ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயரை பயன்படுத்துவது போல் அவரை நீங்கள் செய்திருக்கிறீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -