நாளை உகோ பைனல்.. நிறைய தோத்து அழுது இருக்கேன்.. இனி முடியாது ஜெயிக்கணும் – ஹர்மன்பிரித் கவுர் பேட்டி

0
61

நாளை பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வெல்வோம் என இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியிருக்கிறார்.

நாளைக்கு இந்த போட்டி மதியம் நவி மும்பை மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் நாளை முதல் முறையாக புதிய சாத்தியமாக ஒரு அணி வர இருக்கிறது. இந்த நிலையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மிகவும் உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

நான் நிறைய அழுவேன்

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட ஒரு நபர் நான்தான் மிக அதிகம் அழுகிறேன். இது தோல்வியின் போது இன்று இல்லாமல் வெற்றியின் போதும் நான் அழுகிறேன். ஒரு வீராங்கனையாக எனக்கு இப்படியான பெரிய தருணங்கள் அவசியம். ஆஸ்திரேலியா போன்ற ஒரு மனநிலை கொண்ட திறமை கொண்ட அணியை தாண்டி இங்கு வருவது பெரிய விஷயம்”

“மேலும் எங்கள் அணியிடம் நான் எப்பொழுதும் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த தேவையில்லை என்று கூறுவேன். உங்களுக்கு அழுவதற்கு தோன்றினால் அழுது விடுங்கள் என்று சொல்லுவேன். நம்மை நாமே தடுத்து நிறுத்த தேவையில்லை. மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் சிறிய சந்தர்ப்பங்களில் கூட முதலில் அழுவது நானாகத்தான் இருப்பேன்”

- Advertisement -

தோல்வியை அனுபவித்து விட்டேன்

“எனக்கு தோல்வி எப்படி இருக்கும் என்று தெரியும். நான் நிறைய அனுபவித்து இருக்கிறேன். எனவே வெற்றி எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். நாளை எங்களுக்கு ஒரு சிறப்பான நாளாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் நிறைய கடினமாக உழைத்து இருக்கிறோம். அதையெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும்”

இதையும் படிங்க : 10 போட்டி 200 ரன் கூட எடுக்கல.. ஜெய்ஸ்வாலை வச்சிக்கிட்டு கில்லை ஊட்டி வளர்க்கிறது நியாயமா? – இர்பான் பதான் கேள்வி

“உலகக் கோப்பை போன்ற ஒரு இறுதி கட்டத்தில் இருக்கும் போது இதைவிட ஒரு பெரிய சிறப்பான விஷயம் இருக்க முடியாது. எங்களுடைய அணி மிகவும் உற்சாகமாக இருக்கிறது. மேலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார்கள். இது இந்த போட்டிக்கு நாங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. நிச்சயம் நாங்கள் வெல்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -