9000 ரன்கள்.. 600 விக்கெட்டுகள்.. ஆனாலும் இந்திய அணியில் இடமில்லை.. யார் இந்த அதிர்ஷ்டம் இல்லாத வீரர்?

0
899
ICT

பொதுவாக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது என்பதே சர்வதேச கிரிக்கெட்டில் தேசிய அணிக்காக விளையாடுவதற்காகத்தான். ஆனால் சில வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்படும் கூட தேசிய அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போன துரதிஷ்டமான நிகழ்வுகள் நடந்திருக்கிறது.

இந்த வகையில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் மும்பை மாநில அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் விளையாடிய அமோல் மஜும்தார் மிக முக்கியமானவர். தற்போது இவருக்கு 50 வயதாகிறது.

- Advertisement -

இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் முதல் தர போட்டிகளில் மட்டும் 11 ஆயிரம் ரன்களுக்கு மேலும், அதில் 30 சதங்கள் மற்றும் 60 அரைசதங்கள் என விளாசி இருக்கிறார். இவருடைய காலகட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியில் புதிய வீரர்களுக்கு இடம் இருந்தும் கூட, இவருக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமான விஷயம். மும்பை மாநில அணிக்கு விளையாடி இந்திய அணிகள் இடம் கிடைக்காதது அதைவிட ஆச்சரியமான விஷயம்.

இந்த வகையில் தற்பொழுது 37 வயதாகும் ஜலஜ் சக்சேனா இணைந்து இருக்கிறார். இவர் தனது முதல் கிரிக்கெட் வாழ்க்கையை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக துவங்கினார். இதற்கு அடுத்து மத்திமத்தில் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக மாறிக் கொண்டார்.

மேலும் இவரது உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்கம் மத்திய பிரதேச அணிக்காக அமைந்தது. நெடுங்காலம் அந்த அணிக்காகவே தொடர்ந்து விளையாடினார். அதற்குப் பிறகு 2016 முதல் இவர் கேரள அணைக்கு மாறிக்கொண்டார்.

- Advertisement -

இந்த வாரத்தில் துவங்கிய இந்த ஆண்டுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கேரள அணிக்காக விளையாடி இரண்டு விக்கெட் கைப்பற்றிய பொழுது, இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமான சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரரானர்.

இவர் தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சேர்த்து 600 விக்கெட்டுகள் கைப்பற்றி, மேலும் 9 ஆயிரம் ரன்கள் பேட்டிங்கில் குவித்திருக்கிறார். இவருக்கு முன்பாக மதன் லால் மற்றும் வினு மன்காட் இருவர் மட்டுமே இந்திய உள்நாட்டு கிரிக்கெட் 600 விக்கெட்டுகள் 9000 ரன்கள் எடுத்தவர்களாக இருந்தார்கள். இவர் மூன்றாவது சாதனை வீரராக இணைந்திருக்கிறார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய புள்ளி விபரங்களை வைத்திருந்த பொழுதும் கூட, இவருக்கு இந்திய தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டார். இருந்தும் அங்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை!