9 இந்திய பவுலர்கள்.. 160 ரன்கள் வித்தியாசம்.. நெதர்லாந்தை வென்று புது சாதனை.. அரை இறுதிக்கு தயார் நிலையில் இந்தியா.!

0
4102

நடப்பு உலகக் கோப்பை தொடரின் இறுதி லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இந்த வருட உலக கோப்பை தொடரின் 45 ஆவது போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

வழக்கம் போலவே ரோஹித் மற்றும் கில் ஜோடி இந்திய அணிக்கு அதிரடியான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 71 பந்துகளில் நூறு ரன்கள் சேர்த்து நிலையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கில் 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா 54 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உதவியுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிடில் ஓவர்களில் இந்திய அணியின் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்தப் போட்டியில் விராட் கோலி 2023 உலகக் கோப்பையில் தனது 5-வது அரை சதத்தை பதிவு செய்தார். இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் 51 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 51 ரன்கள் எடுத்ததன் மூலம் 2023 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்றார்.

இதனைத் தொடர்ந்து ராகுல் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் இருவரது அதிரடியால் சின்னசாமி மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்தது. சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதியாக இவர் 94 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருடன் மறுமுனையில் விளையாடிய ராகுல் 62 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பை போட்டி தொடரில் அதிவேக சதம் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். கேஎல் ராகுல் 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இவர்கள் இருவரது அவ்வாறு ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர்களில் 410 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் இழந்திருந்தது. கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட் இருக்கு 208 ரன்கள் சேர்த்தனர். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் பஸ் டி லீட் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய நெதர்லாந்த அணி தூக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர் பர்ரேஷி 4 ரன்னில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு டவுட் மற்றும் ஆக்கர்மேன் இருவரும் இணைந்து நெதர்லாந்து அணியை ஆரம்ப சரிவில் இருந்து மீட்க போராடினர்.

- Advertisement -

இந்நிலையில் ஆக்கர்மேன் 35 ரன்னிலும் டவுட் 30 ரன்னிலும் அவுட் ஆயினர். இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த எட்வார்ட்ஸ் 17 ரன்னிலும் பஸ் டி லீட் 12 ரன்னிலும் அவுட் ஆக நெதர்லாந்த அணி 5 விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும் அந்த அணியின் வீரர் ஏங்கள்பிரக்ட் தனி ஆளாக போராடின 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த நிதமரு மற்றும் வான் பீக் இருவரும் இணைந்து நெதர்லாந்த அணியின் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க போராடினர். எனினும் இறுதி 60 பந்துகளில் 221 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இமாலய இலக்கு அவர்களின் முன் இருந்தது.

அதிரடியாக விளையாடிய ரன்களை சேர்க்க முற்பட்ட நெதர்லாந்த அணியின் வீரர்கள் வான் பிக் 15 ரன்னிலும் வாண்டர் மெர்வே 16 ரன்னிலும் அவுட் ஆயினர். இவர்களைத் தொடர்ந்து ஆரியன் தத் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் சிறப்பாக விளையாடிய நிதமரு 39 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் நெதர்லாந்து அணி 250 ரன்கள் ஆனது. இதன் மூலம் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு ஆதிக்கம் செலுத்தும் வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் தவிர அனைத்து வீரர்களும் பந்து வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா இந்த போட்டியில் 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா முகமது சிராஜ் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். மேலும் இந்த வெற்றியின் மூலம் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பெற்ற சாதனையை இந்திய அணி முறியடித்து இருக்கிறது. மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்று இருக்கிறார்.